SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு தேவையான வசதிகளை பெற தொலைபேசி எண் அறிமுகம்

2019-03-15@ 10:27:21

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்களிக்க வேண்டுமெனில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி, ஆணையாளர் கோ.பிரகாஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மாவட்டத்தில் 913 இடங்களில் 3,754 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இம்மையங்களில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று சிரமமின்றி எளிதில் வாக்களிக்க சக்கர நாற்காலிகள், சாய்தள வசதி, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொட்டு உணரக்கூடிய வகையில் பிரெய்லி முறை போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்களை அடையாளம் காண சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கண்டறியவும், அவர்கள் 100% வாக்களிப்பதனை உறுதி செய்யவும், 24 மணிநேரமும் தனி அலுவலர்களுடன் இயங்கும் அலுவலகத்தில் ‘‘94454 77699″ என்ற கைப்பேசி எண் அறிமுகப்படுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண்ணிற்கு மாற்றுத்திறனாளி வாக்காளரோ அல்லது அவர்களது பெற்றோரோ அல்லது காப்பாளரோ அல்லது சமூக ஆர்வலர்களோ தொடர்புகொண்டோ அல்லது மிஸ்டு கால் அல்லது வாட்ஸ்-அப் மூலமாகவோ தொடர்புகொண்டு மாற்றுத்திறனாளியின் வாக்காளர் அடையாள அட்டை எண், முகவரி மற்றும் வாக்குச்சாவடி மையம் போன்ற தகவல்களை தெரிவிக்கலாம். தகவல் பெறப்பட்டதும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள், அவர்களை தொடர்புகொண்டு தேர்தலில் வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வார்கள், என தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்