SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பராமரிப்பு பணி காரணமாக ஞாயிற்றுக்கிழமை ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

2019-03-15@ 02:07:24

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருத்தணி வரை இயக்கப்படும் மின்சார ரயில் மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி வரை ரத்து செய்யப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு ஆவடி முதல் திருத்தணி வரை இயக்கப்படுகிறது. மேலும், அரக்கோணம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருவள்ளூர் முதல் மூர்மார்க்கெட் வரையும், பட்டாபிராம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருத்தணி முதல் மூர்மார்க்கெட் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு ஆவடி வரை இயக்கப்படுகின்றன.

மேலும், பிற்பகல் 1.50 மணிக்கு ஆவடி - பட்டாபிராம் சைட்டிங் வரையும், காலை 9.45 மணிக்கு மூர்மார்க்கெட் - அரக்கோணம் வரையும், காலை 11.55, 1.50, 2.25 மணிக்கு அரக்கோணம் - திருத்தணி வரையும், பிற்பகல் 1.15 மணிக்கு திருவள்ளூர் - மூர்மார்க்கெட் வரையும், காலை 11.10 மணிக்கு ஆவடி - அரக்கோணம் வரையும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. வேளச்சேரி - கடற்கரை வழித்தடம்: சென்னை கடற்கரையில் இருந்து 17ம் தேதி  காலை 8, 8.20, 8.40, 9, 9.20, 9.40, 9.50, 10, 10.20, 10.40, 11, 11.20,  11.40, 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40 ஆகிய நேரங்களில் வேளச்சேரிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து  செய்யப்படுகிறது. பிற்பகல் 2 மணி முதல் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கப்படும்.

அதேப்போல், வேளச்சேரியில் இருந்து காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30, 10.40, 10.50,  11.10, 11.30, 11.50, 12.10, 12.30, 12.50, 1.10, 1.30 மற்றும் 1.50 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பிற்பகல் 2.10 மணி முதல் வேளச்சேரி- சென்னை கடற்கரை இடையே ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்