SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பராமரிப்பு கட்டணம் தருவதில் தமிழக அரசு தாமதம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஆந்திரா மறுப்பு: சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

2019-03-15@ 02:05:55

சென்னை: பராமரிப்பு கட்டணம் தர தமிழக அரசு தாமதம் செய்ததால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் தர ஆந்திர அரசு மறுத்துள்ளது. தமிழக அரசு கேட்ட நீர் கிடைக்காததால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகம் - ஆந்திரா தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக பொதுப்பணித்துறை அரசு செயலாளர் பிரபாகர் தலைமையில் பொறியாளர்கள் குழுவினர் கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி ஆந்திரா சென்றனர்.  அங்கு, ஆந்திர நீர்வளத்துறை செயலாளரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, 4 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்று ஆந்திர நீர்வளத்துறை செயலாளரை தமிழக அதிகாரிகள் வலியுறுத்தியதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் 362 கோடி பராமரிப்பு கட்டணம் பாக்கி வைத்து இருப்பது குறித்து ஆந்திரா தெரிவித்தது.

அப்போது, விரைவில் பாக்கி கட்டணத்தை தருவதாக தமிழக அரசு கூறியது. பொதுவாக இவ்வாறு தமிழக அரசு செயலாளர் ஆந்திரா செல்லும் போது, தமிழக அரசின் சார்பில் பராமரிப்பு கட்டணத்தை தருவது வழக்கம். ஆனால், இந்த முறை செல்லும்போது பராமரிப்பு கட்டணத்தை தரவில்லை. இதனால், தான் ஆந்திர அரசு 1 டிஎம்சி வரை மட்டுமே தண்ணீர் தர சம்மதித்தது. இதை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 6ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 10ம் தேதி தமிழக எல்லைக்கு வந்து சேர்ந்தது. இந்த நிலையில், 1 டிஎம்சியாவது முழுவதுமாக கிடைக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இதற்கிடையே தமிழக அரசு பராமரிப்பு கட்டணம் தரும் என்று ஆந்திரா எதிர்பார்த்தது. ஆனால், கட்டணம் தருவதற்கு எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. இதனால், நெல்லூர் மாவட்ட குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு தண்ணீரை ஆந்திரா திருப்பி விட்டது. இதனால், தமிழகத்திற்கு தண்ணீர் வருவதும் படிப்படியாக குறைந்தது. கடந்த மார்ச் 2ம் தேதி கண்டலேறு அணையில் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், தற்போது ஆந்திர அரசுக்கு 25 கோடி கட்டணத்தை தமிழக அரசு செலுத்தி உள்ளது. இந்த பணத்தை முன்கூட்டியே ஆந்திராவிற்கு தமிழக அரசு கொடுத்திருந்தால் கூடுதலாக ஆந்திராவிடம் இருந்து குடிநீருக்கு பெற்றிருக்க முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்