SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொள்ளாச்சி சம்பவத்துக்கு இதுவே காரணம் அணுகுண்டை போல ஆபத்தானது செல்போன்: பெற்றோர் கண்காணிக்கும்படி ஐகோர்ட் அறிவுரை

2019-03-15@ 00:08:23

மதுரை: கையில் இருக்கும் அணுகுண்டைப் போல செல்போன் பேராபத்தாக உள்ளது. ஆபாச வலைத்தளங்கள், மது ஆகியவை சமூகத்தை மாசுபடுத்துகின்றன என ஐகோர்ட் கிளை  நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.மதுரை கீழக்குயில்குடியை சேர்ந்த விஜயகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு:செல்போன் பயன்பாடு காரணமாக இன்று ஒவ்வொருவரும் இருந்த இடத்திலேயே இணையத்தை பயன்படுத்துகின்றனர். அரசு பணிகள் உள்பட அனைத்தும் இணையத்தை சார்ந்தே இருக்கின்றன. அதேசமயம் அதன் தீங்குகளும்  வளரத்தொடங்கின. குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், ஆபாச இணையதளங்களின் பயன்பாடு, புளூவேல், வெப் புல்லிங் போன்ற விளையாட்டுக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவது என இணையதளத்தின் தீங்குகளும்  அதிகரிக்க தொடங்கிவிட்டன. இது பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது.

‘பாரெண்டல் வின்டோ’ என்ற மென்பொருளை பயன்படுத்தி சிறார்கள்,  தவறான இணையதள முகவரிகளை, ஆபாச இணையதளங்களை பார்க்க முடியாமல் பெற்றோர்கள் தடை செய்து கட்டுப்படுத்தலாம். இந்த பாரெண்டல்  வின்டோ மென்பொருள் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது இணையசேவை வழங்குவோரின் கடமை.  இதுகுறித்து 2017ம் ஆண்டு மத்திய  தொலை  தொடர்புத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. எனவே, இணையசேவை வழங்க உரிமம் பெற்றவர்கள், பாரெண்டல் வின்டோ மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.இவ்வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இணையசேவை முறைப்படுத்தப்படாததே சமூகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம்’’ என்றார்.

அதற்கு நீதிபதிகள், ‘‘பேஸ்புக், செல்போன்  ஆகியவற்றின் பயன்பாடு இன்று அதிகளவில் உள்ளது. கையில் இருக்கும் அணுகுண்டைப்போல செல்போன் பேராபத்தாக உள்ளது. அதன் நன்மை, தீமைகள் குறித்து தெளிவாக  அறியாமல் பயன்படுத்துவதின் விளைவே பொள்ளாச்சி சம்பவம் போன்ற வருந்தத்தக்க நிகழ்வுகளுக்கு காரணம். இதுதொடர்பாக அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும். அது நீதிமன்றத்தின் பணி மட்டுமல்ல.  ஆபாச  வலைத்தளங்கள், மது ஆகிய இரண்டும் சமுகத்தை மாசுபடுத்தும் மிகப்பெரும் பிரச்னைகளாக காணப்படுகின்றன. இவற்றை முறைப்படுத்த தவறினால் இளைஞர்கள் தங்களின் ஆரோக்கியத்தையும், வளமான எதிர்காலத்தையும்,  சிந்தனையையும் இழக்கும் நிலை உருவாகும். பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்’’ என கருத்து தெரிவித்து, இதுகுறித்து இணையசேவை வழங்குவோர் சங்க செயலர்,  குழந்தைகள் உரிமை பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்