SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சபரிமலையில் தரிசனத்திற்கு வந்த 4 இளம்பெண்கள் எதிர்ப்பால் திருப்பி அனுப்பப்பட்டனர்

2019-03-15@ 00:08:01

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 21ம் தேதிவரை இந்த விழா நடக்கிறது. இந்த முறையும் இளம் பெண்கள் சபரிமலைக்கு வர  வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 பேர், பம்பையில் இருந்து சன்னிதானம் சென்று கொண்டிருந்தனர். அந்த குழுவில் ஒரு இளம் பெண் இருக்கலாம்  என்ற சந்ேதகம் பக்தர்களுக்கு ஏற்பட்டது.

இதையடுத்து பக்தர்கள் அந்த குழுவினரிடம் விசாரித்தனர். அப்போது 45 வயதுக்கு குறைவான ஒரு பெண் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண்ணை தரிசனத்திற்கு செல்லக் கூடாது என்று பக்தர்கள் எதிர்ப்பு  தெரிவித்தனர். பிறகு அந்த பெண்ணை திருப்பி அனுப்பினர். இது மரக்கூட்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதே போல் ஆந்திராவை சேர்ந்த 3 இளம் பெண்கள் சபரிமலைக்கு வந்தனர். அவர்கள் சன்னிதானம் செல்ல பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் 3 இளம் பெண்களையும் திருப்பி அனுப்பினர். இந்த  சம்பவத்தால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

  • mouni_amavaaa1

    வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்