SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போர்க்கால நடவடிக்கை

2019-03-15@ 00:05:47

அமெரிக்க அதிபர் தேர்தலில், பேஸ்புக் தலையீடு பெருமளவில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதன் பின்னணியில் ரஷ்யா இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், ரஷ்யா அதை தொடர்ந்து மறுத்து வந்தாலும், இந்த விவகாரத்தில் சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டது என்னவோ மறுக்க முடியாது. இப்போது இந்தியாவில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. சமூக வலைதளங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால், அதற்கான விரிவான செயல்திட்டங்கள் எதையும், தேர்தல் ஆணையம் விளக்கவில்லை. ஆளானப்பட்ட அமெரிக்காவே, கடைசி நேரத்தில்தான் பேஸ்புக்கின் தகிடுதத்தங்களை கண்டுபிடித்தது. ஆனால், இந்தியாவில் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பதாக கண்டுபிடிப்பதற்குள்ளாகவே அடுத்த தேர்தல் வந்துவிடும். சமூக வலைதளங்களில் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேர்கள் ெபாருத்தப்பட்டுள்ளன. ஒருவர் எதைப்பற்றி பார்த்தாலும், அது சம்பந்தப்பட்ட விளம்பரங்கள், புகைப்படங்கள், வீடியோக்களை தானாகவே இந்த சாப்ட்வேர் வாடிக்கையாளருக்கு எடுத்து தரும். மேலும், சமூக வலைதளங்களை பார்ப்பவர்கள், எந்த மூடில் இருக்கிறார்கள் என்பதை கூட அதனால் கண்டுபிடிக்க முடியும் என்றும், அதற்கு தகுந்தவாறு விஷயங்களை அதனால் உட்செலுத்த முடியும் என்றும் தகவல் துறை நிபுணர்களால் கூறப்படுகிறது.

இதுபோன்ற நிலையில், வாக்காளர்களின் மனநிலையை ஒரு கட்சிக்கு சார்பாகவோ அல்லது ஒரு வேட்பாளருக்கு சார்பாகவோ, அதனால் இழுத்துவிட முடியாது என்பது என்ன நிச்சயம்? தேர்தல் ஆணையத்தில் இதுபோன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு சாப்ட்வேர் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்றால், கேள்விகள் தான் மிஞ்சுகின்றன. நாடாளுமன்றக் குழு அனுப்பிய நோட்டீசுக்கே சமூக வலைதள நிர்வாகிகள் நேரில் ஆஜராவதற்கு பல நாட்கள் இழுத்தடித்தார்கள். இதுபோன்ற விஷயங்களை செய்யாதே என்று அவர்களிடம் கூறி, உத்தரவாதத்தை பெறுவதற்குள் தேர்தலும் முடிந்துவிடும். இதனால் தேர்தலில் தகிடுத்தத்தங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொறுப்பை, இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடம் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதையும் போர்க்கால அடிப்படையில்
மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் குறைந்தபட்சம் தேர்தல் நேரத்திலாவது சமூக வலைதளங்களை முடக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை உடனடியாக செய்யாவிட்டால் பாதிப்பு இந்திய ஜனநாயகத்துக்குத்தான். அதுமட்டுமின்றி, கோடிக்கணக்கான நிதி, இதற்காக வெளிநாட்டிற்கு செல்வதையும் தடுக்க முடியாது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • thirunangai

  கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்