Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ராமதாஸ் மீது வழக்கு : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்ப

மாற்றம் செய்த நேரம்:4/29/2013 2:57:18 PM


சென்னை: மரக்காணம் கலவரம் குறித்து சட்டசபையில் இன்று கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் கடந்த 25ம் தேதி வன்னியர் சங்கம் அதாவது பாமக சார்பில் சித்திரை முழுநிலவு வன்னியர் பெருவிழா நடந்தது. அதே நாளில் திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா, மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டி போன்றவற்றுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. எனினும், சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு விழாவுக்கு ஒரு டிஐஜி தலைமையில் 1910 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் வந்து கொண்டிருந்த 30 பேர், மரக்காணம் கடையம் தெரு காலனி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் உணவருந்தியுள்ளனர். அவர்களில் சிலர் மது அருந்தியுள்ளனர். அப்போது அந்த காலனியை சேர்ந்த சிலர், ஏற்கனவே தகராறு நடந்த இடத்தில் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்க, வாகனத்தில் வந்தவர்கள் அவர்களை அடித்து துரத்தியுள்ளனர். பின்னர் காலனியை சேர்ந்த 200 பேர், மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்து கற்களையும் கட்டைகளையும் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

விழாவுக்கு சென்றவர்கள் மரக்காணம் உள்ளிட்ட பல இடங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதோடு பொது சொத்துகளுக்கும் தனியார் சொத்துகளுக்கும் சேதம் விளைவித்தனர். பலர் வாகனங்களின் மேற்கூரையில் ஏறி நடனம் ஆடியும் ஆபாசமான வார்த்தைகளை பேசியும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்துள்ளனர். பத்து மணிக்குள் கூட்டத்தை முடித்துக் கொள்வதாக விழா அமைப்பாளர்கள் உறுதி அளித்திருந்தனர். ஆனால், விழாவில் பங்கேற்ற பாமக தலைவர் ராமதாஸ் பேசும்போது, ‘‘11.30 மணிக்கு பேசறேன். போடு வழக்கை. அதெல்லாம் நமக்கு கவலை கிடையாது’’ என்று கூறியுள்ளார்.

பத்து மணிக்குள் விழாவை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை உதாசீனப்படுத்தியதற்காக ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போடுங்கள் வழக்கை என்ற அவரது கோரிக்கைக்கு ஏற்ப வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்டு நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை அவர் ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
my wife emotionally cheated on me women cheat because my boyfriend cheated on me with a guy

தொடர்புடையவை

மேலும்

Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
Dmk For 2016

செய்திகள்

Advertisement
Advertisement

சற்று முன்

Advertisement
Advertisement
Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Daily News

2

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நலம்
பெருமை
மறதி
ஓய்வு
கோபம்
பணிவு
போட்டி
சாந்தம்
நிம்மதி
உயர்வு
தடங்கல்
நன்மை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran