SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்தால் வழக்குபதிவு: காவல்துறை எச்சரிக்கை

2019-03-14@ 17:52:07

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை தெரியாமல் பகிர்ந்து கொண்டால் கூட அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசாரால் கைது செய்ய முடியும் என்று காவல்துறை கூறியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியான வீடியோ சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும் எனக் கூறி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் கடந்த 3 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக இன்று சில கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இது தொடர்பாக பேசிய சென்னை மத்திய குற்றப்பிரிவு இயக்குனர் அன்பு, பாலியல் வழக்குகள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை தெரியாமல் பகிர்ந்தால் கூட அது குற்றம் தான் என்று கூறினார். பகிரப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோவில் இருப்பது ஒரு சிறாராக இருந்தால் அதனை பகிந்தவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். பொள்ளாச்சி சம்பவங்கள் போன்ற வீடியோக்களை பகிர்ந்து கொள்வது வழக்கின் தன்மையை பாதிக்கும் என்று காவல்துறை அதிகாரி அன்பு கூறியுள்ளார். இதனால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று குற்றவாளிகள் தரப்பு வாதாடுவதற்கும் இடமளித்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல தொலைக்காட்சிகளின் பெயரில் சமூக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்களின் உண்மை தன்மையை ஆராயாமல் பகிரக்கூடாது என அவர் எச்சரித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்