SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

4 ஆயிரம் சுவர் விளம்பரங்கள் அழிப்பு : சென்னை மாநகராட்சி நடவடிக்கை

2019-03-14@ 17:09:11

சென்னை : தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் இதுவரை 4 ஆயிரத்திக்கும் மேற்பட்ட சுவர் விளம்பரங்களை மாநகராட்சி அதிகாரிகள் அழித்துள்ளனர். நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளான மார்ச் 10ம் தேதி மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி பகுதியில் அரசு மற்றும் தனியார் சுவர்களில் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு அரசு மற்றும் தனியார் சுவர்களில் வரையப்பட்டிருக்கும் விளம்பரங்களை தேடி, தேடி சென்று அழித்தவாறு இருக்கின்றனர். அதன்படி அரசு மற்றும் பொது இடங்களில் வரையப்பட்டிருந்த 2 ஆயிரத்து 722 விளம்பரங்களும், தனியார் சுவரில் வரையப்பட்டிருந்த ஆயிரத்து 761 விளம்பரங்களும் இதுவரை அழிக்கப்பட்டுள்ளன. இதேபோல், சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள விளம்பரங்களை அழிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்