SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களவைத் தேர்தல் 2019 : பா.ம.க தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

2019-03-14@ 11:36:57

சென்னை: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான பா.ம.க-வின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அக்கட்சியின் தலைமை 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா நாளை (15.03.2019) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. நாளை காலை 11.30 மணிக்கு சென்னை தியாகராயநகர் எண் 115 தியாகராயர் சாலையில் உள்ள ரெசிடென்சி டவர்ஸ் விடுதியில் இந்நிகழ்வு நடைபெறுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே,மணி, இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரும் பங்கேற்கின்றனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பாமகவுக்கு தருமபுரி, அரக்கோணம், விழுப்புரம், கடலூர் ஆகிய 4 தொகுதிகள் உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் வடதமிழகத்தில் 3 தொகுதிகளை பாமக-வும் தேமுதிகவும் ஒன்றாக கேட்பதே தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் நிலவுவதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நாளை பாமக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்