SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதுக்காகத்தான்யா... சுட்டுட்டு வந்திருக்காங்க...: பரூக் அப்துல்லா பகீர்

2019-03-12@ 00:20:34

ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: நாடாளுமன்றத்தில், பல விஷயங்களில் பா.ஜ தோல்வியடைந்தது எல்லோருக்கும் தெரியும். அதனால் பாகிஸ்தானுடன் சிறிய அளவிலான போரில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் பிரதமர் மோடி, புது அவதாரமாக உருவெடுக்க முடியும் என நினைத்தார்கள். இதனால் தேர்தலுக்காவே, பாலக்கோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நாம் பல கோடி மதிப்புள்ள விமானத்தை இழந்தோம். நல்ல வேளை பைலட் தப்பிவிட்டார். அவரை பாகிஸ்தான் மரியாதையுடன் திருப்பி அனுப்பிவிட்டது.  பிரதமர் மோடிக்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். அவரோ, நானோ இல்லையென்றாலும், இந்தியா வாழும், முன்னேறும். இங்கு போரே ஏற்படாது. உலகமே கண்காணித்து கொண்டிருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மூத்த அதிகாரியை இந்த அரசு பயன்படுத்துகிறது.

பலரை முந்திக்கொண்டு பதவிக்கு வந்த அந்த அதிகாரி, பா.ஜ உத்தரவுக்கு ஏற்ப ஆடுகிறார். மோடி இல்லையென்றால் எதுவும் நடக்காது என்ற அச்சுறுத்தலான சூழலை அவர்கள் உருவாக்குகின்றனர். அவர் கடவுள் இல்லை.
காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுடன் பேசுவதை தவிர வேறு வழியில்லை. காஷ்மீரை உலக நாடுகளின் கவனத்துக்கு மத்திய அரசு கொண்டு வந்து விட்டது. இந்த விவகாரம் குறித்து இந்தியா-பாகிஸ்தான் பேச வேண்டும் என பலநாடுகள் கூறுகின்றன. அதனால் காஷ்மீர் விவகாரம் பற்றி பாகிஸ்தானுடன் பேசுவதுதான் ஒரே வழி. காஷ்மீரில் ஏதோ குறும்பு செய்ய மத்திய அரசு நினைக்கிறது. அதனால்தான் அங்கு சட்டப்பேரவை தேர்தல் தாமதப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்