SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெப்ரோனிக்ஸ் 80 செ.மீ வளைவடிவ 'ZEB-AC32FHD LED' மானிட்டர் மூலம் சுவாரஸ்யமான அனுபவத்தை பெறுங்கள்.

2019-03-06@ 17:12:23

ஒரு வழக்கமான பணி நாளுக்குப் பிறகு, வீட்டிற்கு வந்து ஒரு பெரிய திரையில் பொழுதுபோக்கை அனுபவிக்க நீங்கள் விரும்பலாம் , திரைப்படங்களைப் பார்ப்பது அல்லது கேமிங்கில் அமர்ந்து  முடிவில்லாத நேரத்தை கழிக்க  விரும்பலாம். பெரியதொரு அகன்ற மற்றும் வளைவடிவ திரை என்பது நீங்கள் பொழுதுபோக்க விரும்பும் திரைக்காட்சியின் விகிதத்தை சிறந்த  அம்சங்கள் பொருந்தியதாகவும் உண்மையான காட்சிகளை பார்க்க கூடிய ஒரு அனுபவத்தையும் சேர்க்கும்.

ஜெப்ரோனிக்ஸ் இந்தியா இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்பத்தின் புறவெளி பிராண்ட்டாக  தயாராகிறது. ஒலி உபகரணங்கள், மொபைல்/நவநாகரீக வீட்டு உபயோக பொருட்கள்  மற்றும் கண்காணிப்பு சாதனங்களை   பிரீமியம் 80 செ.மீ.  எல்.இ.டி “ZEB-AC32FHD” எனும் பெரிய திரையை அறிமுகப்படுத்துகிறது.

ZEB-AC32FHD LED ஒரு மெல்லிய இன்னும் குறைந்தபட்ச  வளைந்த விளிம்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது திரையில்  பார்க்கும்  அனைத்தும் நிஜத்தில் தோன்றுவது போன்றதான ஒரு உண்மையான அனுபவத்தை உணர்வீர்கள், காட்சிக்கு மட்டுமல்லாது உட்புற ஒலிப்பெருக்கியின் ஒலி ஒரு அசாத்திய அனுபவத்தை கொண்டுவருகிறது..

இந்த மானிட்டர் கண்களுக்கு அயர்ச்சி உண்டாக்காத  டிஸ்ப்ளேபோர்ட் மற்றும் HDMI போன்ற உள்கட்டமைப்பினை  கொண்டுள்ளது. இதில் காணும் வண்ணங்கள் அடர் கருப்பாகவும், பளீர் வெளுப்பாகவும் உயர்தர நிறங்களையுடையதாகவும் இருக்கும். இது 500000: 1 டைனமிக் காண்ட்ராஸ்ட் மற்றும்   178 டிகிரி பார்வைக் கோணத்தில் தொடர்ந்து கூர்ந்து காணக்கூடிய வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

நீண்டநேர பார்வையாளராக இருப்போருக்கு ஏதுவாக அல்ட்ரா- ஸ்லிம் மெல்லிய திரை அணிவிக்கப்பட்டிருப்பதால் உங்களுக்கு அயர்ச்சி தோன்றாது.

எல்இடி மானிட்டரின்  பின்புறத்தில் மெனு பொத்தான்களை கொண்டுள்ளது மேல் / கீழ் மற்றும் ஆன்/ஆஃப் சுவிட்ச் உள்ளது.. இது ஹெட்போன் ஜாக், டிபி மற்றும் HDMI போர்ட் ஆகியவற்றோடு DC  உள்ளீடுகளுடன் சேர்த்து கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு 144HZ புதுப்பிக்கப்பட்ட வீதத்துடன் கூடிய இந்த  மானிட்டர், கேமிங்-ல்  வேகமாகவும் அதே சமயம் ஆர்வத்தை தூண்டுவதாக அமையும். மிகவும் பளபளப்பான மானிட்டரும் அதன் நவீன அழகும், சுவற்றில் மாட்டும் வசதியும் உங்களை வியப்பின் உச்சிக்கு கொண்டுசெல்லும்.

இந்த தயாரிப்பின் அறிமுக  நிகழ்வில் பேசிய, ஜெப்ரோனிக்ஸ் இந்தியாவின் இயக்குனர் திரு. பிரதீப் தோஷி, 'ஸ்மார்ட் புரோகிராமிங் மானிட்டர்கள் உண்மையிலேயே புரட்சிகரமானவை, அவை மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. எங்களது சமீபத்திய LED மானிட்டர் ZEB-AC32FHD, ஒரு 80 செ.மீ. பரந்த வளைந்த எல்.ஈ. டி மானிட்டர், என்பது இந்திய தயாரிப்புகளில் முதன்முதலாக எங்களால் அறிமுகப்படுத்தப்படுகிறது இது உண்மையிலேயே அதிவேக அனுபவத்திற்காகவும் பொழுதுபோக்கிற்காக திரைகளில் நேரம் செலவிடுவோரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்ல நவீனமாக  கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த தயாரிப்பு இந்தியா முழுவதும் முன்னணி கடைகளில் கிடைக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்