சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு தங்கம், டிஜிட்டல் கேமரா கடத்திய வாலிபர் கைத

Date: 2013-04-25@ 01:11:13

சென்னை : சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த அமுனூதின் (28) என்பவர் தன்னிடம் சுங்கவரி செலுத்துவதற்கான பொருட்கள் எதுவும் இல்லை என கூறி கிரீன் பேனல் வழியாக வெளியே செல்ல முயன்றார்.

ஆனால், அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவரிடம் சோதனை நடத்தினர். அப்போது, அமுனூதின் தான் ஒரு சிவில் இன்ஜினியர் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். அதை கண்டுகொள்ளாமல் அவரது சூட்கேசை சோதனை செய்தனர். அதில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள டிஜிட்டல் கேமரா இருந்தது. அவரது பேன்ட் பாக்கெட்டில் கருப்பு பேப்பரில் பொட்டலம் ஒன்று சுற்றி வைக்கப்பட்டு இருந்தது. அதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 25 சவரன் நகைகள் இருந்ததை கண்டு பிடித்தனர்.

பின்னர் அவரிடம் விசாரித்ததில், சிங்கப்பூர் விமான நிலையத்தில் 2பேர் வந்து இந்த தங்க நகைகளையும், கேமராவையும் கொடுத்தனர். நண்பர் ஒருவர் விமான நிலையத்தில் வந்து வாங்கி கொள்வார். உங்களுக்கு ரூ.5 ஆயிரம் அன்பளிப்பு தருவார் என்றனர். அதற்கு ஆசைப்பட்டு வாங்கி வந்தேன் என்றார். அவர் கொண்டு வந்த கேமரா, தங்க நகை ஆகியவை கடத்தல் பொருட்கள் என தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அமுனூதினை கைது செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what

Like Us on Facebook Dinkaran Daily News