SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 3 மாத குழந்தை பலி : போதை ஆசாமியால் விபரீதம்

2019-02-24@ 00:58:18

சென்னை: வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்தவர் ஜெகன் (42). ஆட்ேடா டிரைவர். இவரது மனைவி அர்ச்சனா. இவர்களது 3 மாத குழந்தை ேயாகேஷ்ராஜ். நேற்று முன்தினம் மாலை அயனாவரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற ஜெகன், அங்கிருந்து இரவு ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். கொன்னூர் நெடுஞ்சாலை சாகுர் நகர் அருகே வந்தபோது, போதை ஆசாமி திடீரென சாலை குறுக்கே வந்ததால், ஜெகன் பிரேக் போட்டார். இதில், ஆட்டோவில் பின்னால் இருந்த அர்ச்சனா, யோகேஷ் ஆகியோர், ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தனர். அர்ச்சனாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. குழந்தை யாகேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன், யோகேஷை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது.

 கொருக்குப்பேட்டை அண்ணாநகர் அன்பழகன்  தெருவை சேர்ந்தவர்  முத்து (30). இவரது மனைவி கவிதா (26). இவர்களுக்கு  திருமணமாகி 5 ஆண்டுகள்  ஆகிறது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான்  கவிதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு கண் பார்வையில்  குறைபாடு இருந்துள்ளது. இதனால், மனமுடைந்து காணப்பட்ட முத்து, நேற்று  முன்தினம் இரவு வீட்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து  கொண்டார்.

 வட சென்னையின் பல பகுதிகளில்  அதிகாலையில் பால்  கடைகளின் முன்பு டிரேக்களில் வைக்கப்படும் பால்  பாக்கெட்களை திருடி விற்று  வந்த தண்டையார்பேட்டை திலகர் நகரை சேர்ந்த  ஜெகதீஷ் (24) என்பவரை,  சிசிடிவி காட்சி பதிவு மூலம் போலீசார் கைது  செய்தனர்.

  நெற்குன்றத்தை சேர்ந்த ரமேஷ் (50) என்பவருக்கும்,  அவரது மனைவி விமலா (45)  என்பவருக்கும் இடையே கடந்த 18ம் தேதி ஏற்பட்ட  தகராறில்,  ஆத்திரமடைந்த  விமலா, சுடுநீரை எடுத்து கணவன் மீது ஊற்றினார்.  இதில், அவர்  பரிதாபமாக  இறந்தார். போலீசார் வழக்கு பதிந்து விமலாவை கைது  செய்தனர்
.
 ராஜீவ்காந்தி சாலையில் சோழிங்கநல்லூர் குமரன் நகர் அருகே நேற்று மாலை மாநகர பேருந்து (த.எ.எம்119) சென்றபோது, அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பஸ் கட்டுப்பாட்டை இழந்து மாநகர பஸ் மீது மோதியது. இதில், பள்ளி பஸ் டிரைவர் தாஸ் (40) கால் முறிந்தது. பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

 திருவேற்காடு அயனம்பாக்கத்தை சேர்ந்த விஸ்வநாதன் (47) என்பவர் வீட்டில் நுழைந்து, பீரோவில் இருந்த 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • TokyoOlympicTorch

  2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

 • newzealandattack

  நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

 • PhilipinesWhalePlastic

  இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

 • StalinElectionCampaign19

  தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

 • NorwayUnderRestaurant

  ஐரோப்பாவின் முதல் கடலுக்கடியில் இயங்கும் உணவகம்...நார்வே நாட்டில் துவக்கம்: பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்