SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்ததது இலங்கை

2019-02-23@ 16:37:15

போர்ட் எலிசபெத் :  தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி அபாரமாக வென்றது. தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இலங்கை அணி சாதனை வெற்றி பெற்றது. முன்னதாக இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. பரபரப்பான முதல் டெஸ்ட் போட்டியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 21 ம் தேதி போர்ட் எலிசபெத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளேஸிஸ் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 222 ரன்களை  எடுத்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்க்ராம் 60 ரன்களையும் , டி காக் 86 ரன்களையும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ , ரஜிதா தலா 3 விக்கெட்களையும் டி சில்வா 2 விக்கெட்களையும் எடுத்தனர்.


இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 154 ரன்களில் எடுத்தது. இலங்கை அணி சார்பாக திக்வெல்ல 42 ரன்களையும் , திரிமன்னே 29 ரன்களையும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 4 விக்கெட்களையும் , ஆலிவர் 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்.


68 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா , இலங்கை அணியின் துல்லியமான பந்து வீச்சில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் கேப்டன் டு பிளேஸிஸ் ஆட்டமிழக்காமல் 50 ரன்களையும் , அம்லா 32 ரன்களையும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா அணியில் 8 பேர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி சார்பில் லக்மால் 4 விக்கெட்களையும் ,டி சில்வா 3 விக்கெட்களையும் ,ரஜிதா 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.


196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 197 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ 75 ரன்களையும் , மெண்டிஸ் 84 ரன்களையும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றி தேடி தந்தனர்.  இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இலங்கை அணி சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியின் நாயகனாக மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்