SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேதுபாவாசத்திரம் அருகே தென்னந்தோப்புகளில் திடீர் தீ

2019-02-23@ 13:12:41

சேதுபாவாசத்திரம் : சேதுபாவாசத்திரம் அருகே தென்னந்தோப்புகளில் ஏற்பட்ட தீவிபத்தால் விழுந்து கிடந்த மரங்கள் எரிந்து சாம்பலானது.கஜா புயல் கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி அதிகாலை கரையை கடந்தது. இதனால் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதியில் 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்திருந்த ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதையடுத்து தென்னை அரசு அறிவித்த நிவாரணம், 40 சதவீத விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இதனால் தோப்புகளில் சாய்ந்து விழுந்த தென்னை மரங்கள் மற்றும் மட்டைகள் அகற்றப்படாமல் உள்ளது.

இந்நிலையில் சேதுபாவாசத்திரம் அடுத்த கழனிக்கோட்டையை சேர்ந்த பழனிவேலு என்பவரது தென்னந்தோப்பில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது தோப்பில் விழுந்து காய்ந்து கிடந்த மரங்கள், மட்டைகள் எரிந்தது.காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி அருகிலிருந்த அன்பழகி, அய்யாச்சாமி, ராஜேந்திரன், வீரையன் ஆகியோரது தோப்புகளுக்கும் பரவியது. உடனடியாக பேராவூரணி தீயணைப்பு துறையினருக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்