SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது: காஷ்மீர் பாதுகாப்பிற்காக 100 கம்பெனி துணை ராணுவப்படை வருகை

2019-02-23@ 13:05:51

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் உட்பட பலர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.காஷ்மீர் மாநிலம் புல்மாவாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்தக் கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து காஷீமீரில் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை அரசு திரும்பப் பெற்றது.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 35-ஏ வை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது. இதனால் காஷ்மீரில் பதற்றம் ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை காஷ்மீர் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவருமான யாசின் மாலிக்கை போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு, 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஆகாய மார்க்கமாக அனுப்பி வைக்கப்பட்டனர். புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. யாசின் மாலிக் கைதை தொடர்ந்து தலைநகரில் பதற்றம் சூழ்ந்துள்ளது. பாதுகாப்புப் படையினருடன் இணைந்து, அம்மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அவசரமாக துணை ராணுவப் படையினரை அங்கு அனுப்பி வைக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து 100க்கும் மேற்பட்ட கம்பெனி துணை ராணுவப் படையினர், ஆகாய மார்க்கமாக ஸ்ரீநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்