SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டு வருமானத்தை அதிகம் காண்பிக்க காரைக்கால்-திருச்சி இடையே 2 பயணிகள் ரயிலை ரத்து செய்வதா?

2019-02-23@ 12:59:06

* மத்திய அரசுக்கு கண்டனம்

நாகை :நிலக்கரி ஏற்றி செல்லும் சரக்கு ரயில்கள் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு ஆண்டு வருமானத்தை அதிகமாக காண்பிக்க வியாபார நோக்கோடு காரைக்கால்-திருச்சி இடையே இரண்டு பயணிகள்  ரயில்கள் ரத்து செய்யப்பட்டதற்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து தினந்தோறும் காலை 6.30 மணி, மதியம் 12.40 மணி, மாலை 3 மணி மற்றும் 5.50 மணிக்கும் பாசஞ்சர் மற்றும் டெமு ரயில்கள் இயக்கப்படுகிறது.

அதேபோல  திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு காலை 6.20 மணிக்கு பாசஞ்சர் ரயிலும், காலை 10.10 மணி, மாலை 4.30 மணிக்கும் டெமு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் நாகூர், நாகை, கீழ்வேளூர், திருவாரூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த ரயில் பயணிகள் பயனடைந்து வந்தனர். மேலும் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் திருநள்ளாறு, சிக்கல், வேளாங்கண்ணி, நாகூர் போன்ற முக்கிய வழிபாட்டு ஸ்தலங்களுக்கு ரயில்கள் மூலம் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

 இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மாலை 3 மணிக்கு காரைக்காலில் இருந்து திருச்சி செல்லும் டெமு ரயிலும், காலை திருச்சியில் இருந்து 10.10க்கு புறப்படும் டெமு ரயிலும்  திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் ரயில் நிலையம் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.  இது குறித்து ரயில்வே ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது,  மார்ச் 31ம் தேதி ஆண்டு கணக்கு முடிக்க உள்ளதால் அதற்குள் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து அதிக அளவில் நிலக்கரி ஏற்றிக் கொண்டு சென்றால் ரயில்வே நிர்வாகத்திற்கு வருமானம் கூடுதலாக்கி கணக்கு காண்பிக்க வேண்டும்  என்பதற்காக மார்ச் 31ம் தேதி வரை 40 நாட்களுக்கு மாலை 3 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்படும் டெமு ரயில்களும், காலை 10.10 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் டெமு ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.  

 காரைக்காலில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு குறைந்த எண்ணிக்கையில் ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ரயில் பயணிகள் நலன் கருதியும், வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல், திருநள்ளாறு போன்ற முக்கிய ஸ்தலங்களுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதியும், ரயில் சேவையை தொடர வேண்டும் என்று  தென்னகர ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

   இது குறித்து சமூக ஆர்வலர் கீழ்வேளூரை சேர்ந்த வேணுகோபால் கூறுகையில், மத்திய அரசின் ரயில்வே நிர்வாகம் வியாபார நோக்கோடு காரைக்கால்-திருச்சி இடையே 2 ரயில்களை முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்துள்ளது. காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி சென்றால் அதிக வருமானம் என்பதற்காக பொதுமக்களுக்காக இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்களை ரத்து செய்வது கண்டனத்திற்கு உரியது. உடன் ரயில்வே நிர்வாகம் வருமானத்தை கருத்தில்கொள்ளாமல் பொது மக்கள் நலன் கருதி ரத்து செய்த பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்