SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அதிமுக அரசு நடத்துமா என சந்தேகம்: கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

2019-02-23@ 12:13:19

ஓசூர்: 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அதிமுக அரசு நடத்துமா என சந்தேகம் எழுந்துள்ளது என ஓசூர் அருகே திமுக நடத்தும் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார். ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்து வருகிறது. இடைத்தேர்தலில் அதிமுக தோற்றால் ஆட்சி கவிழும். இதனால் 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அதிமுக அரசு நடத்துமா என சந்தேகம் உள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு பணியாற்ற திமுக காத்திருக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.மோடியை அப்புறப்படுத்திவிட்டு மத்தியில் திமுக கூட்டணியில் ஒரு சிறப்பான ஆட்சி அமைய உள்ளது. திமுக ஆதரிப்பவரே இந்த நாட்டின் பிரதமராக வர போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று ஸ்டாலின் கூறினார். வரும் தேர்தலில் ஒரு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மேலும் கிராம மக்களிடம் ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். திமுக வெற்றி பெறும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அரசு தாமதிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்