SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வருமான வரித்துறை ரெய்டால் ஆட்டம் காணும் அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-02-23@ 00:51:25

‘‘அமைச்சர் வீட்டில் ஐ.டி. ரெய்டு நடந்து ஊரே கதிகலங்கிக்கிடக்கே...’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
 ‘‘ஆமா..வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைச்சர் கே.சி.வீரமணியின் ஆதரவாளர்களின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் அமைச்சரை ஆட்டம் காண வைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளதால் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ஓரளவுக்கு முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆளுங்கட்சியின் அமைச்சர் வீடு, உறவினர்கள் வீடு, திருமண மண்டபம் போன்ற இடங்களில் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளது. இது கூட்டணி கட்சிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏன் இந்த ரெய்டு என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம், வேலூர் என இரண்டு எம்பி தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் அரக்கோணம் கூட்டணி கட்சியான பாமகவுக்கும், வேலூர் தொகுதி கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கே.சி.வீரமணி இதுகுறித்து கட்சி தலைமையிடம், ‘வேலூர் நாடாளுமன்ற தொகுதியை கூட்டணி கட்சிக்கு தரக்கூடாது. மாவட்டத்தில் ஒரு எம்பியாவது நமது கட்சியை சேர்ந்தவர் இருக்க வேண்டும். நாங்கள் தெரிவிக்கும் நபருக்கு சீட் தர வேண்டும். இல்லையெனில் தேர்தலுக்காக கட்சிக்கு பணத்தை செலவிடமாட்டேன் என்று உறுதியாக தெரிவித்தாராம். மேலும் தன்னை கேட்காமல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யக்கூடாது எனவும் கூறினராம். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளுங்கட்சி தரப்பு அமைச்சரை அடக்கி வைக்க பாஜகவை நாடியதாக கூறப்படுகிறது. அதன்பேரில் தான் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி இருப்பதாக அதிமுகவினரே பரபரப்பாக பேசி வருகின்றனர். இந்த ரெய்டால் அமைச்சர் வீரமணி மட்டுமின்றி அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகளும் கலக்கம் அடைந்துள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பட்டியல் போட்டு, பணம் அமுக்குறாங்களாமே...’’ என அடுத்த விவகாரத்துக்கு தாவினார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சி குப்பை அகற்றும் பிரிவில் இருக்கும் அதிகாரிங்க அடிக்கிற தொகைக்கு அளவே இல்லாம போயிடுச்சி.. குறிப்பா, ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் திடக்
கழிவு மேலாண்மை எனக்கூறி, தட்டு, தட்டு...ன்னு, தட்டி எடுக்கிறாங்க... பேட்டரி கார் வாங்க ₹14.33 கோடி, மினி ஆட்டோ வாங்க ₹5.71 கோடி, குப்ைபயில் இருந்து இயற்கை உரம் தயாரிக்க என்.சி.சி பிளாண்ட் அமைக்க ₹37.26 கோடி, தோட்டக்கழிவை உரமாக்கும் திட்டத்துக்கு ₹20 கோடி என கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய்க்கு பட்டியல் போட்டு, பணம் அமுக்குறாங்க... ஆனா, நகரில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் ஒன்னுமே நடக்கல... இதில, ரோடு பஞ்சர் ஒர்க் செய்ய ₹40 கோடின்னு... தனியாக நிதி ஒதுக்கியிருக்காங்க... ஆனா, நகரில் ரோடு பஞ்சர் ஒர்க் எங்கும் நடந்ததாக கண்ணுக்கே தெரியல... மக்கள் வரிப்பணம், யார், யார் கையில போய் சிக்குதுன்னே தெரியல... மாநகராட்சி அதிகாரிங்க, காட்டில எப்பவுமே மழைதான்’’ என்றார் விக்கியானந்தா.
‘குமரி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினரை போலீசார் படாதபாடு படுத்தினாங்களாமே...’’
‘‘நாளை நெல்லையில் மக்கள் நீதி மய்ய கட்சியின் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக வாகன பிரசாரம் செய்ய கடந்த 15 நாட்களுக்கு முன்பே குமரி மாவட்ட மக்கள் நீதி மய்ய பொறுப்பாளர்கள், கோட்டார் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால் 22ம் தேதி வரை அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து 22ம்தேதி காலை காவல் நிலையத்துக்கு சென்று கேட்டபோது, உங்கள் மனு ெதாலைந்து விட்டது. புதிதாக எழுதி தாருங்கள் என கூறியுள்ளனர். பின்னர் 22ம் தேதி காலையில் மீண்டும் மனு அளித்துள்ளனர். 24ம்தேதி பொதுக்கூட்டத்துக்கு 22ம் தேதி அனுமதி தந்து, ஒரு நாளில் எப்படி நாங்கள் அச்சிட்ட 10 ஆயிரம் நோட்டீசை கொடுப்போம் என்று நிர்வாகிகள் புலம்புகிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேறென்ன விசேஷம் இருக்கு...’’
‘‘நல்ல செய்திதான்... புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு நாடே திரண்டு அஞ்சலி செலுத்தி வருகிறது. இதற்கு நீதித்
துறையும் விலக்கல்ல என்பதை நீரூபித்துள்ளார் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஷ்வநாத். தாக்குதலில் பலியான தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் வீரமரணத்தையடுத்து அவரது வீடு தேடி சென்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான குழுவினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சுப்பிரமணியன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு அவரது குடும்பத்திற்கு ₹3.15 லட்சமும் நிவாரணமும் வழங்கி நல்ல முன் உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார். சுப்பிரமணியன் புதைக்கபடவில்லை, விதைக்கப்பட்டுள்ளார் என சுட்டிக் காட்டிய நீதிபதி அவரது புகழுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாகவும், சுப்பிர
மணியனின் பட்டதாரி மனைவியும் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்ற வேண்டும். மேஜர் நிலைக்கு உயர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நீதித்துறையின் இந்த புதிய முயற்சி அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்