SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் 2 புள்ளிகளை சுலபமாக விட்டுக்கொடுக்க கூடாது

2019-02-22@ 18:36:21

மும்பை : கடந்த 14-ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா  பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் சிஆர்பிஎப்  வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பாகிஸ்தான் நாட்டை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி  தற்கொலை தாக்குதல் நடத்தினான்.  இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணடமடைந்தனர். இந்த தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த வர்த்தகத்துக்கு உகந்த நட்புறவு நாடு எனும் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக  ரத்து செய்தது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 200 சதவீதம் சுங்கவரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் 10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கவிருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கடிதம் எழுத உள்ளதாக பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்குலி, ஹர்பஜன் எதிர்ப்பு


இன்னொரு புறம் உலக கோப்பை தொடரில் ஜூன் 16-ந்தேதி மான்செஸ்டரில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆடக்கூடாது என்று முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, ஹர்பஜன்சிங் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

சச்சின்  கருத்து  :


உலக கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் விளையாடாமல் 2 புள்ளிகளை
 கொடுப்பது தனக்கு வெறுப்பை தரும் என்று கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் தெரிவித்துள்ளார். மேலும்  உலக கோப்பை போன்ற மிக பெரிய தொடரில் விளையாடாமல் எதிரணிக்கு 2 புள்ளிகளை விட்டுக்கொடுக்க கூடாது என்றும் உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் இதுவரை தோற்றதில்லை அதை நிரூபிக்க மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார். நாம் விளையாடாமல் இருந்தால் கிடைக்கும் புள்ளிகள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு பாகிஸ்தான் அணி முன்னேற நாமே வழி ஏற்படுத்தி கொடுத்தது போல் ஆகிவிடும் எனவும் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.  மேலும் தமக்கு நாடு தான் முக்கியம் என்றும் நாடு என்ன முடிவு எடுக்கிறதோ அதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாகவும் சச்சின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கவாஸ்கர் கருத்து


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட மறுத்தால் யாருக்கு வெற்றி கிடைக்கும்? என முன்னாள் கிரிக்கெட் வீரர்  கவாஸ்கர்  கேள்வியெழுப்பியுள்ளார்.  அரையிறுதி போட்டி குறித்தோ இறுதிப்போட்டி குறித்தோ பேசவில்லை என்றும்  லீக்கில் அவ்வாறு நடந்தால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அந்த அணி 2 புள்ளியை எளிதாக பெறும் எனவும் கூறியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் நாம் இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றது கிடையாது. ஒவ்வொரு முறையும் நாம், பாகிஸ்தானை வீழ்த்தி (6 முறை) இருக்கிறோம். 2 புள்ளியை வழங்கி, நாமே அவர்களை அடுத்த சுற்றுக்கு எளிதில் முன்னேறவிட கூடாது. பாகிஸ்தானி அணியுடன் களம் இறங்கி அவர்களை தோல்வியுற செய்து, அரைஇறுதிக்கு அந்த அணி முன்னேறக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் செயல்பட வேண்டும். என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.தேசத்தின் நலனே முதலில் முக்கியம் என்றும் இந்திய அரசாங்கம் எந்த முடிவு எடுத்தாலும் அதை முற்றிலும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ள கவாஸ்கர், பாகிஸ்தானுடன் நாம் விளையாடக்கூடாது என்று நாடு விரும்பினால், அந்த முடிவுக்கு ஆதரவாக நிற்பேன் எனவும் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்