SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் ரூ.332.45 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாலம், பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

2019-02-22@ 17:55:48

சென்னை :  தரம் உயர்த்தப்பட்ட ராஜபாளையம் - சங்கரன்கோவில் நெல்லைச் சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.332.45 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலை, ஆற்றுப் பாலங்கள், சாலை மேம்பாலம் உள்ளிட்டவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தலமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகரில் கட்டப்பட்டுள்ள 34 காவலர் குடியிருப்புகள், மங்கலத்தில் காவல் நிலைய கட்டிடம் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் 2ன் கீழ் ராஜபாளையம் - சங்கரன் கோவில் நெல்லைச் சாலை தரம் உயர்த்தப்பட்டது. சாலை பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து சாலையை சென்னையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் 58 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்து காவல் நிலையத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் தர்மராஜன் மற்றும் நிர்வாகிகளும் காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு உயர்நிலை பள்ளியில் கட்டப்பட்டு இருந்த வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வகக் கட்டிடங்கள், கழிவறை மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றையும் பல்வேறு பகுதிகளிலும் ரூ. 126 02 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் சிவகங்கையில் ரூ.44. 76 கோடி மதிப்பீட்டில் 210 வீடுகளை கட்டுவதற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்