SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொது இடங்களை ஆக்கிரமித்து 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டுள்ளன: தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

2019-02-22@ 17:44:04

சென்னை: தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டுள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு தொடர்பாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்கள் உள்ளிட்டவைகளை ஆக்கிரமித்து 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கோவை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள விநாயகர் சிலையை அகற்றவேண்டும் என கோரியும் அரசு நிலங்கள் மற்றும் பொது சாலைகள் ஆக்கிரமித்து வழிபாட்டு தலங்கள் கட்டக்கூடாது என்ற அரசு உத்தரவை பின்பற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் மீதான விசாரணையில், கடவுளாக இருந்தாலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது எனவும் மேலும் அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்கள் உள்ளிட்டவைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும் படி தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தமிழகம் முழுவதும் 3003 கோவில்களும், 131 சர்ச்சுகளும், 27 மசூதிகளும், பிற மதத்தை சேர்ந்த 7 வழிபாட்டு தலங்களும் என மொத்தமாக 3168 வழிபாட்டு தலங்கள் பொது இடங்களில் ஆக்கிரமித்திருப்பதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்