SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம் : அமித்ஷாவுடனான சந்திப்பிற்கு பின் பன்னீர்செல்வம் பேட்டி

2019-02-22@ 16:59:26

மதுரை : தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் என்று மதுரை விமான நிலையத்தில் அமித்ஷாவுடனான சந்திப்பிற்கு பின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அமித்ஷாவுடன் ஓ பன்னீர் செல்வம் சந்திப்பு  


தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மதுரை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வதை சந்தித்தார். இருவரும் விமான நிலைய வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். கூட்டணியின் தேர்தல் பரப்புரை வியூகம் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, தமிழக பாஜகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மதுரையில் தேர்தல் பொறுப்பாளர்களுடன் அமித்ஷா ஆலோசனை

மதுரை அருகே 18 மக்களவை தொகுதிகளுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். மதுரை அடுத்த எலியார்பட்டியில் தனியார் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாரத ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முரளிதரராவ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட 18 மக்களவை தொகுதியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்களும் பங்கேற்றனர். அப்போது தேர்தல் பணிகள் குறித்தும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா ஆலோசனைகளை வழங்கினார்.   

பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு

இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் சென்ற அமித்ஷா, அங்கு பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய  அமித்ஷா, பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்கும் போரில் தமிழகத்தில் இருந்து 32 எம்பிக்கள் பங்கேற்பார்கள் என பாஜகத் தேசிய தலைவர் அமித்ஷா நம்பிக்கை கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது,' நாடாளுமன்ற தேர்தல் யுத்தத்திற்காக இங்கே நாம் ஒன்றுபட்டிருக்கிறோம், தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும்; தீவிரவாத செயலை பாஜக அரசு சகித்துக்கொள்ளாது, தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் சுப்பிரமணியன், சிவசந்திரன் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள், தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வலிமையாக பாஜக கூட்டணி போட்டியிடுகின்றன; வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும், 'அமித்ஷாவின் இந்தி உரையை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மொழிப பெயர்த்து கொண்டிருந்தார். அப்போது முறை சாரா தொழிலாளர்கள் என்று எச் ராஜா மொழிப் பெயர்த்ததும் சந்தேகம் அடைந்த அமித்ஷா, சரியான மொழிப் பெயர்ப்பு தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.

ஓ  பன்னீர்செல்வம் - அமித்ஷா மீண்டும் சந்திப்பு


இந்நிலையில் அமித்ஷாவுடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் மீண்டும் சந்திப்பு மேற்கொண்டார். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியோடு பாஜக தலைவர் அமித்ஷாவுடன் துணை முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். விஜயகாந்தை ஸ்டாலின் சந்தித்ததை தொடர்ந்து அமித்ஷாவுடன் பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். தேமுதிக கேட்டுள்ள தொகுதிகள் பரிசீலிக்கப்படுமா? என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஓ  பன்னீர்செல்வம் பேட்டி


இதனிடையே அமித்ஷா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று மதுரை விமான நிலையத்தில் அமித்ஷாவுடனான சந்திப்பிற்கு பின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, 'எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி; தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்; தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும்; அதிமுக அமைத்துள்ள கூட்டணி தமிழகத்தில் வெற்றிப் பெறக் கூடிய கூட்டணி,' என்றார்.  


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்