SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி பொறுப்பேற்பு

2019-02-22@ 15:43:31

சென்னை : சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக செந்தில் குமார் ராமமூர்த்தி பதவியேற்று கொண்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக செந்தில் குமார் ராமமூர்த்தியை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் உத்தரவிட்டு இருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தொடர்ந்து நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 75 நீதிபதிகள் பணியிடம் உள்ளது.

அவற்றில் ஏற்கனவே 51 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி பதவியேற்றுக் கொண்டார். தலைமை நீதிபதி தஹில் ரமணி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். செந்தில் குமார் ராமமூர்த்தி நீதிபதியாக பதவியேற்றதை  தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய சூழலில் மேலும் 15 நீதிபதிகளின் பணியிடங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ளன. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்