SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் காயம்

2019-02-22@ 15:34:52

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த குவன்பாறை பட்டாசு ஆலையில் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தில் இடிந்து தரைமட்டமான மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பட்டாசுகள் வெடித்து கொண்டே இருப்பதால் மீட்புப் பணியில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இந்த பட்டாசு ஆலை சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கும் உரிமத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 10 அறைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 10 அறைகளில் இன்று காலை வழக்கம் போல சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணியும் அனுமதியின்றி பெரிய ரக பட்டாசுகள் அதாவது ஃபேன்சி ரக பட்டாசுகளும் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பட்டாசு தயாரிப்பின் போது உராய்வின் காரணமாக இந்த ஆலையின் ஒரு அறையில் பட்டாசுகள் வெடிக்க தொடங்கியுள்ளது.



இந்த வெடிவிபத்து வெகு விரைவில் மற்ற அறைகளுக்கும் பரவியுள்ளது. இந்த விபத்தில் இந்த ஆலையில் உள்ள அனைத்து அறைகளும் தரைமட்டமாயின. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வெம்பக்கோட்டை, கோயில்பட்டி, திருவேங்கடம், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைக்கும் பணியிலும், மீட்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் கோயில்பட்டி, வெம்பக்கோட்டை, திருவேங்கடம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசுகள் தொடர்ந்து வெடிப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

  • airportchina2019

    சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

  • nevadaarea11

    அமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்