SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூடுவாஞ்சேரியிலேயே முகிலனின் செல்போன் இணைப்பு துண்டிப்பு : முகிலனை கண்டுபிடிக்க கோரிய வழக்கில் காவல்துறை பதில்

2019-02-22@ 15:22:13

சென்னை:  சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்க கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 4ம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகிலனை கண்டுபிடிக்க கோரிய ஆட்கொணர்வு மனுவின் விவரம்


சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஹென்றி டிஃபேன்  தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018 மே 22ல் நடந்த போராட்டத்தின்போது பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். இதற்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்பான வீடியோவை சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கடந்த 15ம் தேதி  சென்னையில் வெளியிட்டார்.

அதன்பிறகு அவர் அன்று இரவு சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் சென்றுள்ளார். ஆனால், திண்டிவனத்தை தாண்டியதுடன் அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு அவரது தொடர்பு முற்றிலும் நின்றுவிட்டது. இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்தோம். நடவடிக்கை எடுக்கப்படவில்லை.எனவே அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு


இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன்,  எம்.நிர்மல் குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஆர்.சுதா ராமலிங்கம், வக்கீல் சி.அய்யப்பராஜ் ஆஜரானார்கள். அப்போது, நீதிபதிகள், அகிலன் காணாமல் போய்விட்டதாக பிப்ரவரி 17ம் தேதி புகார் கொடுத்துவிட்டு மறுநாளே நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளீர்கள். மனுவில் சட்டவிரோதமாக முகிலன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். போலீசார் விசாரிக்க அவகாசம் தரவேண்டும். இந்த வழக்கில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பிக்கள்  22ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

முகிலன் ரயிலில் பயணிக்கவில்லை : காவல்துறை தகவல்

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன்,  எம்.நிர்மல் குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, தங்கள் தரப்பு தகவல்களை கூறிய எழும்பூர் ரயில்வே காவல்துறை முகிலன் ரயிலில் பயணிக்கவில்லை என்று கூறினார். இதுகுறித்து நீதிபதியிடம் தகவல் தெரிவித்த ஒலக்கூர் எஸஐ, கூடுவாஞ்சேரியிலேயே முகிலனின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் முகிலன் போனதாக கூறப்படும் ரயில் ஓலக்கூரில் நிற்காது என்றும் தெரிவித்தார்.

இந்த வழக்கில் எழும்பூர் ரயில்வே போலீஸ், எழும்பூர் காவல் நிலையம், திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஆகியோரை எதிர்மனுதாரராக இணைத்துள்ள நீதிமன்றம், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முகிலன் வந்து சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்களை எழும்பூர் காவல்துறையிடம் தாக்கல் செய்ய எழும்பூர் ரயில்வே போலீசுக்கு உத்தரவிட்டது. மேலும் முகிலன் காணாமல் போன வழக்கில் விசாரணையை அறிக்கையை வருகிற மார்ச் 4ம் தேதி தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

 • airportchina2019

  சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

 • nevadaarea11

  அமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்