SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

2019-02-22@ 14:54:55

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்தினார்.  நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. 18 வயது முடிவடைந்த அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற வகையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி புதிதாக  பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்ய விண்ணப்பித்தவர்களின் பட்டியலை கடந்த மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்த நிலையில், நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வசதியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க  தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 23ம் தேதி (நாளை), 24ம் தேதி (நாளை மறுதினம்) தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 67 ஆயிரம்  வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பெயர் சேர்க்கலாம். வீடு மாறியவர்கள் தங்கள்  விலாசத்தை இந்த முகாமில் மாற்றலாம். அதேபோன்று திருத்தம் செய்யவும் வசதி உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக, இன்று  தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன்  சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 9 கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், மக்களவை தேர்தலில் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் பூத் ஏஜன்டுகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

  • airportchina2019

    சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

  • nevadaarea11

    அமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்