SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹெச்ஐவி பாதித்த குழந்தை சிகிச்சையில் அலட்சியம்? கோவை அரசு மருத்துவமனை மீது பெற்றோர் புகார்

2019-02-22@ 14:35:05

கோவை: ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட 2 வயது பெண் குழந்தைக்கு கோவை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். காலை ஒருமுறை மட்டுமே மருத்துவர் வந்து குழந்தையை பார்த்து செல்வதாக தந்தை விஸ்வநாதன் புகார் கூறியுள்ளார். உடலில் ஏற்பட்டுள்ள தடிப்புகளுக்கும், சளிக்கும் மட்டுமே சிகிச்சை அளிப்பதாகவும் ஹெச்ஐவி பாதிப்புக்கு சிகிச்சை ஏதும் அளிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். இதனால் கோவை அரசு மருத்துவமனையை விட்டு வெளியேறி விட்டதாகவும் விஸ்வநாதன் வேதனை தெரிவித்துள்ளார்.
 
மணப்பாறையை சேர்ந்த தம்பதி திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் 2 வயது குழந்தைக்கு 6 முன் மாதங்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையின் போது ரத்தம் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து குழந்தையின் உடலில் சில மாதங்களில் தடிப்புகள் ஏற்பட்டதுடன் சில மாற்றங்கள் ஏற்பட்டன. மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்த போது குழந்தைக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. புகாரை மறுத்துள்ள கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் சுகாதாரத்துறைக்கும் விரைவில் அறிக்கை அளிக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்