SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுங்கள் : ராணுவத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு

2019-02-22@ 14:27:41

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுங்கள் என்று அந்நாட்டு ராணுவத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஸ் -இ - முகமது என்ற பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது. துணை ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுக்க உத்தரவு


இந்நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், பயங்கரவாதம் உள்ளிட்ட தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடனான பேச்சவார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசு விரும்புகிறது என்று கூறினார். ஆனால் பாகிஸ்தானை ஆக்கிரமிக்கும் நோக்கத்திலோ அல்லது விபரீதமாகவோ இந்தியா எதாவது நடவடிக்கையை மேற்கொண்டால் தக்க பதிலடி கொடுக்குமாறு பாகிஸ்தான் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க உத்தரவு

இதனிடையே இந்தியா போர் தொடுக்கலாம் என்ற அச்சம் காரணமாக மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்கும்படி அரசு அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் ஜீலானி மருத்துவமனைக்கு எழுதியுள்ள கடிதத்தில் போர் சூழல் ஏற்பட்டால் மருத்துவ உதவிகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் 25% இடங்களை ராணுவத்தினருக்காக ஒதுக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் அதிரடி தாக்குதல் நடத்தலாம் என ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்