SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலைஞர் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர் விஜயகாந்த்; சந்திப்புக்கு பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

2019-02-22@ 14:00:14

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் 18ம் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி சென்னை திரும்பினார். இந்நிலையில் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க தொண்டர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்கள் என வந்து கொண்டு உள்ளனர்.


இந்த நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்த பேச்சுவார்த்தை கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது. அதன்படி, சென்னை அடையாறு நட்சத்திர ஓட்டலில் பாமக தலைவர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 சீட்டும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து பாஜ தரப்பில் மத்திய அமைச்சரும், தமிழக பொறுப்பாளருமான பியூஸ் கோயல் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் கூட்டணி உருவானது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டது. தேமுதிகவுடனும் அதிமுக கூட்டணி உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சீட் எண்ணிக்கையில் ஏற்பட்ட இழுபறி காரணமாக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இந்த பரபரப்பான சூழ்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் தான் நேற்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும் அவரிடம் அரசியல் பேசியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சந்தித்து பேசினார். அப்போது அரசியல் எதுவும் பேசவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் விரைவாக உடல்நிலை தேறிவந்து நாட்டுக்கும் மக்களுக்கும் விஜயகாந்த் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். கலைஞர் கருணாநிதி மீது அளவுகடந்த பாசம் கொண்டவர் விஜயகாந்த் என்றும், அரசியல் பேசுவதற்காக நான் வரவில்லை என்றும், உடல்நிலை பற்றி தான் விசாரித்தேன் என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்