SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுகவையும், முதல்வரையும் விமர்சித்து விட்டு பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது : திமுக தலைவர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

2019-02-22@ 13:11:08

சென்னை : மக்கள் விரோத கூட்டணியாக அதிமுக - பாஜக - பாமக கூட்டணி அமைந்துள்ளதாகவும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற முழக்கம் தற்போது மாற்றம், ஏமாற்றம் சூட்கேஸ் மணியாக மாறி இருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை மாதவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான சுதர்ஷனத்தின் இல்லத் திருமண விழா திருவேற்காட்டில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.

 இதையடுத்து விழாவில் பேசிய அவர், அதிமுக, பாரதிய ஜனதா, பாமக கூட்டணி ஒரு மக்கள் விரோத கூட்டணி என்றும் விமர்சித்தார். திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றுக் கூறி கொண்டு அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதன் மூலம் அதிமுக, திராவிடக் கட்சி இல்லை என்பது நாட்டிற்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற பாமகவின் முழக்கம் தற்போது மாற்றம், ஏமாற்றம் சூட்கேஸ் மணியாக மாறி இருப்பதாகவும் சாடினார். மேலும் மாம்பழம் சின்னத்தின் மூலம் வருமானத்தை ஈட்டி வருவதாக பாமகவை மறைமுகமாக விமர்சித்தார். தொடர்ந்து தற்போதைய அதிமுக ஆட்சி கடல் தாண்டியும் ஊழல் செய்து வருவதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்