SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

18 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த தனி விமானம் மூலம் மதுரை வந்தார் அமித் ஷா..!

2019-02-22@ 12:59:29

மதுரை : பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தனி விமானம் மூலம் இன்று மதுரை வந்தடைந்தார்.வரும் மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது பாஜக. அதிமுக கூட்டணியில் பாஜக கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு அமித் ஷா இன்று வந்தார். மதுரை வந்த அமித் ஷாவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.
அங்கிருந்து அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்றார்


இக்கூட்டத்தில் மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட 18 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் களப்பணிகள், வியூகம் குறித்து எடுத்துரைக்கவுள்ளார். பின்னர் அங்கிருந்து மதுரை விமான நிலையம் வரும் அவர், ஹெலிகாப்டர் மூலமாக ராமநாதபுரம் செல்கிறார். அங்கு பட்டணம்காத்தான் பகுதியில், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, நாகை ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.   


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்