SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜபாளையத்தில் தீ பிடித்து எரிந்த கரும்பு தோட்டம் : பல லட்சம் மதிப்பில் சேதம்

2019-02-22@ 12:58:41

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் தோட்டத்தில் தீ பிடித்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குரும்புகள் எரிந்து நாசமானது. ராஜபாளையம் கருங்குளம் கண்மாய்க்கு உட்பட்ட பகுதியில் நெல் மற்றும் கரும்புகள் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளன. இதில் தற்போது நெல் அறுவடை முடிந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் கரும்புகளை வெட்டி சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புவது வழக்கம். ஆனால் திடீரென கரும்பு தோட்டத்திற்குள் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான கரும்புகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘விவசாய நிலங்களில் மின்சார வயர்கள் தாழ்வாக செல்வதால் மின் உராய்வு நடந்து தீ விபத்து ஏற்படுகிறது. பலமுறை மின்சார வாரியத்தில் எடுத்துக்கூறியும் கண்டுகொள்ளவில்லை. தற்போது லேசான காற்று அடிக்கும்போதே மின் வயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பற்றியுள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கரும்பு சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் மேற்குத்தொடர்ச்சி மலை தோப்பு பகுதிகளில் தென்னை மட்டை மற்றும் மரக்கிளைகள் விழுவதால் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. எனவே விவசாய நிலங்களில் செல்லக்கூடிய மின் கம்பிகளுக்கு பதிலாக கேபிள் வயர்கள் அமைக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

  • airportchina2019

    சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

  • nevadaarea11

    அமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்