SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல ஆண்டுக்கு பின் வரும் பஸ் ரூட்டுக்கு இப்போதே ஸ்டாப்

2019-02-22@ 12:42:26

*  என்ன அக்கறை.. என்ன அக்கறை...
* பொதுமக்கள் மெய்சிலிர்ப்பு

திண்டுக்கல் :  திண்டுக்கல்லில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு 3  ஆண்டுகளுக்கு மேலாகிய ரோட்டில் நவீன பேருந்து நிறுத்தம் அமைத்த  அதிகாரிகளின் அக்கறையை கண்டு பொதுமக்கள் மெய்சிலிர்த்துப் போயுள்ளனர். திண்டுக்கல்  பாலகிருஷ்ணாபுரத்தில் 3 ரயில்வே கேட்டுகளையும் ஒருங்கிணைத்து மேம்பாலம்  கட்டப்பட்டு வருகிறது. இப்பணி துவங்கிய போதே இந்த வழியேயான கனரக  போக்குவரத்து அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த வழி செல்லும்  பேருந்து, லாரி போன்றவைகள் நத்தம் ரோடு, மாலைப்பட்டி ரோடு வழியாக  சுற்றுப்பாதையில் சென்று வருகின்றன.

இருப்பினும் பாலகிருஷ்ணாபுரத்தை  சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் இருப்பதால் டூவீலர், ஆட்டோ போன்ற வாகனங்கள்  மட்டும் நெரிசலான, குறுகிய பாதையில் சென்று வருகின்றன. சப்வே பணி முடிந்த  நிலையில் அதையாவது பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் இலகு ரக வாகனங்கள்  எளிதாய் இப்பகுதியை கடந்து செல்லும். ஆனால் சப்வேக்கு அருகில் உள்ள  கட்டடங்களுக்கு இழப்பீடு தொகை வழங்காததால் அவற்றையும் செயல்படுத்த  முடியவில்லை. நிலத்தை, கட்டடங்களை எழுதி கொடுத்தவர்களுக்கு இன்னமும்  இழப்பீடும் கிடைக்கவில்லை. இதனால் வாகனஓட்டிகளும், பொதுமக்களும் அன்றாடம்  பெரும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில்  சிலுவத்தூர் ரோடு ஆவின் பாலகம் அருகில் நவீன பேருந்து நிறுத்தம் ஒன்று  தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இது இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு பெரும்  ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. காரணம், பேருந்தே செல்லாத ஒருரோட்டில் நவீன  நிறுத்தம் அமைத்ததுதான். மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்  சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ளது என்று அலங்கார வார்த்தைகளால் ஜொலித்து கொண்டிருக்கிறது.

இது  குறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, ‘மாநகரின் பல இடங்களில்  பேருந்துநிறுத்தம் அமைக்க நிதி பெறப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன.  இந்நிதியில் ஒரு நிறுத்தம்தான் சிலுவத்தூர் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது’  என்றனர். பாலம் வேலை முடியவே இன்னும் பல ஆண்டுகள் ஆகும். அதன்பிறகுதான்  இந்த ரோட்டில் பேருந்து இயக்கமே துவங்கும். இருப்பினும் அதற்கு முன்பாகவே  ‘தொலைநோக்கு பார்வையோடு’ நிறுத்தம் அமைத்தது இப்பகுதி மக்களை மெய்சிலிர்க்க  வைத்துள்ளது.

நாம் ஒன்று கேட்டால் அரசு ஒன்று செய்கிறதே


தற்போது  பேருந்துகள் இப்பகுதியில் இயங்காததால் குடிமகன்களுக்கு இந்த நிறுத்தம்  வசதியாக அமைந்து விட்டது. அருகில் உள்ள டாஸ்மாக்கில் சரக்கு வாங்கி வந்து  திறந்தவெளிபாராக இதனை பயன்படுத்தி வருகின்றனர். சிலர் அங்கேயே ‘மட்டையாகி’  விடுவதும் உண்டு. சமீபகாலமாக மேம்பால பணியை விரைவுபடுத்த போராட்டம்  நடந்தது.. இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது..  ஏன்.. சப்வேயை திறக்க  கோரி கூட ரயில் மறியல் நடைபெற்றது. இதில் ஏதோ ஒன்றுதான் நடக்கப் போகிறது  என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு இந்த பேருந்து நிறுத்த அமைவு  தூக்கிவாரி போட்டுள்ளது. நாம் ஒன்று கேட்டால் அரசு ஒன்று செய்கிறதே என  இப்பகுதி மக்கள் மிகவும் குழம்பித்தான் போய் உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

 • airportchina2019

  சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

 • nevadaarea11

  அமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்