SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளி அருகே குழாய் உடைப்பால் குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டுமென நகராட்சி ஆணையரிடம் யுகேஜி மாணவன் மனு

2019-02-22@ 12:36:31

தா.பேட்டை: துறையூரில் தனியார் பள்ளி முன்பாக குடிநீர் குழாய் உடைந்து சில மாதங்களாக தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சி ஆணையரிடம் யுகேஜி மாணவன் மனு அளித்தார்.  துறையூர் சௌடாம்பிகா பள்ளி முன்பாக நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சில மாதங்களாக தண்ணீர் வீணாக சென்றது. குடிநீர் குழாய் உடைப்பை நகராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை. இந்நிலையில் குடிநீர் வீணாவதை கண்ட சவுடாம்பிகா பள்ளியில் யுகேஜி மாணவன் சியாம்கிருஷ்ணா வீட்டில் தனது தாயிடம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

தண்ணீரை வீணடிக்க கூடாது. மரம் வளர்த்து மழை வளத்தை பெருக்க வேண்டும் என ஆசிரியை கூறுகின்றார். ஆனால் எங்கள் பள்ளியின் முன்பு குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என வேதனையோடு கூறியுள்ளார். அதனை சரிசெய்ய நகராட்சியில் புகார் செய்ய வேண்டுமென தாய் கூறியதையடுத்து சியாம்கிருஷ்ணா குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டுமென எழுதப்பட்ட கோரிக்கை மனுவை துறையூர் நகராட்சி ஆணையர் நவேந்திரனிடம் கொடுத்தார். மனுவை பெற்ற ஆணையர் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். யுகேஜி படிக்கும் நான்கு வயது மாணவனின் சமூக பொறுப்பிற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்