SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு ; அரசியல் பற்றி பேசவில்லை என ரஜினி விளக்கம்

2019-02-22@ 11:55:37

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின் போது பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன் விஜயபிரபாகர் உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், நான் உடல்நிலை சரி இல்லாமல் இருந்த போது என்னை முதலில் வந்து பார்த்தவர் விஜயகாந்த் என்று தெரிவித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் 18ம் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு பாரீசில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்னை வந்தது.

அதிலிருந்து விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் வந்தனர். விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் ஓய்வறைக்கு சென்று அவர்கள் அமர்ந்திருந்தனர். அங்கு  படுக்கை வசதி இல்லாததால், சுங்க சோதனை கூடத்தில் உள்ள சுங்க துணை ஆணையர் அலுவலகத்தில் அவசர அவசரமாக படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலை 2 மணிக்கு விஜயகாந்த், அவரது மனைவி அங்கு ஓய்வு எடுத்தனர். காலை 6 மணியில் இருந்தே கட்சி தொண்டர்கள் விமான நிலையம் வரத் தொடங்கினர்.

காலை 8 மணிக்கெல்லாம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டனர். அதேபோல், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சியினரும் விஜயகாந்த் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியே வரவில்லை. பிறகு விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் விமான நிலையம் வந்தார். உடனே, இனிமேல் அவர் வந்து விடுவார் என்று எதிர்பார்த்தனர். மேலும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை ராகு காலம் என்பதால் 11 மணியளவில் வருவார் என்று கருதினர். காலை 10.25 மணிக்கு அவரது மகன் சண்முகப்பாண்டியன் விமான நிலையத்துக்கு வந்தார்.

அதன்பின்னரே 11 மணிநேரம் தாமதமாக பகல் 12.35 மணிக்கு விஜயகாந்த் விமான நிலையத்தில் இருந்து பேட்டரி காரில் வெளியில் அழைத்து வரப்பட்டார். உடனே, வெளியில் திரண்டிருந்த தேமுதிக தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர். இந்நிலையில் தேமுதிகவுடனும் அதிமுக கூட்டணி உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சீட் எண்ணிக்கையில் ஏற்பட்ட இழுபறி காரணமாக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இதே போல் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்றார். அங்கு சுமார் 30  நிமிடத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்த் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், நான் உடல்நிலை சரி இல்லாமல் இருந்த போது என்னை முதலில் வந்து பார்த்தவர் விஜயகாந்த் என்று தெரிவித்தார். மேலும் அவருடனான சந்திப்பில் அரசியல் பற்றி பேசவில்லை என்றும் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

 • airportchina2019

  சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

 • nevadaarea11

  அமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்