SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியை முறையாக பராமரிக்க வலியுறுத்தி மாணவர்கள் சாலைமறியல்

2019-02-22@ 11:25:54

சென்னை: சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் முறையான பராமரிப்பு இல்லாததை கண்டித்து அவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சென்ட்ரல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்னை மருத்துவ கல்லூரியின் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மாணவர் விடுதி உள்ளது. அந்த விடுதியில் பராமரிப்பிற்காக மாணவர்களிடம் தலா முப்பதாயிரமும் உணவிற்கு தலா நான்காயிரமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் விடுதியில் முறையான பராமரிப்பு அடிப்படை வசதி மற்றும் கழிப்பறை வசதி ஆகியவற்றை விடுதி நிர்வாகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும்  மாணவர்கள் அருந்தும் உணவில் பல்லி, வண்டு, புழுக்கள் ஆகியவை சர்வ சாதாரணமாக உலவும் காட்சியை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் மாணவர்கள் நேற்றிரவு விடுதி நிர்வாகத்தின் இந்த அலட்சிய போக்கை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கு வந்த மருத்துவ கல்லூரி அதிகாரி மாணவர்களிடம் பேசி அவர்களின் கோரிக்கைகளை விசாரிப்பதாக கூறியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

  • airportchina2019

    சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

  • nevadaarea11

    அமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்