SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக - பாஜக பேச்சில் இழுபறி நிலையில் தேமுதிகவில் 24-ம் தேதி முதல் விருப்பமனு விநியோகம்... விஜயகாந்த் அறிவிப்பு

2019-02-22@ 10:58:17

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட 24-ம் தேதி முதல் விருப்ப மனு வழங்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 6ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. விருப்ப மனு கட்டணம் பொது தொகுதிக்கு ரூ.20,000, தனித்தொகுதிக்கு ரூ.10,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்த பேச்சுவார்த்தை கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது. அதன்படி, சென்னை அடையாறு நட்சத்திர ஓட்டலில் பாமக தலைவர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 சீட்டும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பாஜ தரப்பில் மத்திய அமைச்சரும், தமிழக பொறுப்பாளருமான பியூஸ் கோயல் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் கூட்டணி உருவானது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டது. தேமுதிகவுடனும் அதிமுக கூட்டணி உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சீட் எண்ணிக்கையில் ஏற்பட்ட இழுபறி காரணமாக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

கூட்டணி தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேச தேமுதிக தரப்பில் சுதீஷ், பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நேற்று காலை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியது. இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்றார். அங்கு சுமார் 30  நிமிடத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

  • airportchina2019

    சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

  • nevadaarea11

    அமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்