SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடக கூட்டணி அரசை இரண்டரை முதல்வர்கள் ஆள்கிறார்கள் - அமித்ஷா

2019-02-22@ 05:46:50

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசை இரண்டரை முதல்வர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்று பாஜ தேசிய தலைவர் அமித்ஷா கடுமையாக தாக்கி பேசினார். கோலார், துமகூரு, சிக்கபள்ளாபுரா ஆகிய 3 மக்களவை தொகுதிகளில் பாஜ சக்தி கேந்திர பிரமுகர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பாஜ தேசிய தலைவர் அமித்ஷா பேசியதாவது: கர்நாடக அரசை இரண்டரை முதல்வர்கள் ஆட்சி செய்கிறார்கள். முதல்வர் குமாரசாமி தனக்கு தானே முதல்வர் என்று அறிவித்துக்கொண்டு கிளர்க் போன்று பணியாற்றுகிறார். காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சித்தராமையா சூப்பர் சி.எம்மாக செயல்படுகிறார். துணை முதல்வர் பரமேஸ்வர் ஒருபாதி முதல்வராக செயல்படுகிறார்.

கர்நாடக மாநிலத்தில் மஜத வெறும் 37 இடங்களில் தான் வெற்றி பெற்றது. அதில் இடம்பெற்றுள்ள குமாரசாமி முதல்வராக இருக்கிறார். வலுவான கட்சியாக பாஜவை மக்கள் அங்கீகரித்து வாக்களித்தது. அக்கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.
மெகாகூட்டணி என்ற ஒன்றை உருவாக்கிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் திட்டம் கர்நாடக கூட்டணி ஆட்சியின் மூலம் தோல்வியை தழுவியுள்ளது.

இந்த மெகா கூட்டணியில் உள்ள தலைவர்கள் எல்லாரும் பிரதமராக விரும்புகிறார்கள். மஜத தேசிய தலைவர் தேவகவுடாவுக்கும் அப்படி ஒரு விருப்பம் இருக்கிறது. ஆனால் மெகா கூட்டணி அமைத்த இவர்கள் இதுவரை யார் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை. எனவே மக்கள் நீங்கள் தான் சிந்திக்க வேண்டும் லாயக்கற்ற அரசு வேண்டுமா, உறுதியான அரசு வேண்டுமா?.

நாட்டில் உள்ள சிறிய மற்றும் ஏழை விவசாயிகள் நலனுக்காக மோடி அரசு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகை திட்டத்தை இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தது. ஆனால் இதை ராகுல்காந்தி வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறார்.

அதே சமயம் காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்துவிடுவோம் என்று கூறுகிறார். முதலில் கர்நாடகாவில் வாக்குறுதி அளித்தபடி விவசாய கடனை ராகுல்பாபா தள்ளுபடி செய்யட்டும். பிறகு இந்தியா முழுவதும் விவசாய கடன் தள்ளுபடி பற்றி அவர் பேசட்டும். கர்நாடக மாநிலத்தில் ரூ.48 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடிக்கு உறுதியளித்துவிட்டு வெறும் ரூ.1600 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார்கள். 2018ம் ஆண்டு தேர்தலில் பாஜவுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை செயல்வீர்கள் ஈடுசெய்ய வேண்டுமென்றால் வரும் மக்களவை தேர்தலில் கடுமையாக உழைத்து அதிக இடங்களில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

மஜதவுக்கு 2லிருந்து 5 இடங்களை தான் காங்கிரஸ் ஒதுக்கி தருவார்கள். அதை ஏற்பதை தவிர குமாரசாமிக்கு வேறு வழியில்லை. இவ்வாறு இருக்கையில் பாஜ நன்கு பணியாற்றி அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். காங்கிரசிமிடமிருந்து கோலார், சிக்கபள்ளாபூர், துமகூரு தொகுதிகளை பறிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்