SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் காங்கிரசுக்கு 9 இடம் நாடாளுமன்ற சீட் பெற தலைவர்கள் போட்டா போட்டி

2019-02-22@ 04:46:47

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் போட்டியிட காங்கிரசாரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அவர்களிடம் விருப்ப மனு வாங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
 திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒன்று என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டிய 9 தொகுதிகள் எவை என்பதை முடிவு செய்யும் வகையில், 18 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தயாரித்த காங்கிரசார் அதை திமுக தலைமையிடம் கொடுத்துள்ளது. இந்த 18 தொகுதிகளில் இருந்து தங்களுக்கு 9 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்தபின் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேசப்படும் என திமுக தரப்பில் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு காங்கிரசாரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் மூத்த தலைவர்களையும் மேலிட தலைவர்களிடம் அழுத்தம் கொடுக்கும் வேலையில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.  அதேபோன்று கோஷ்டி தலைவர்களும் தங்களுக்கும் தங்களது ஆதரவாளர்களுக்கும் சீட்டு வாங்குவதில் மும்முரமாக களம் இறங்கியுள்ளனர்.
 தங்களுக்கு சீட் கேட்டு களத்தில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் சென்னை சத்தியமூர்த்தி பவன் மற்றும் டெல்லி தலைமைக்கு படையெடுத்து வருகின்றனர்.  அங்கு தங்களுக்கு வேண்டிய தலைவர்கள் மூலம் தங்களுக்கான தொகுதிகளை கேட்டு பெறுவதில் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால் சீட்டு பெறுவதில் நடைபெறும் போட்டியை பார்த்து கட்சி தலைமையே வியப்பில் உள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரியாததால், இதுதொடர்பாக அனைவரிடமும் விருப்ப மனு வாங்க தமிழக காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
அதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதிகள் கேட்டு கட்சியினரிடையே கடும் போட்டி நிலவி வருவதால், காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்