SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் கூட்டணியை இறுதி செய்வது குறித்து முதல்வர், துணை முதல்வர் அவசர ஆலோசனை: கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு நடந்தது

2019-02-22@ 04:45:51

சென்னை: தேர்தல் கூட்டணியை இறுதி செய்வது குறித்து முதல்வர், துணை முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தினர். வருகின்ற மக்களவை தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 சீட், பாஜகவுக்கு 5 சீட் என முடிவு செய்யப்பட்டு கையெழுத்தாகி உள்ளது. இந்த கூட்டணியில் சேர தேமுதிகவுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிறிய கட்சிகள் சிலவும் அதிமுகவில் சேர விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே சீட் தர முடியும் என்று அதிமுக முன்னணி தலைவர்கள் உறுதியாக கூறி விட்டனர். இதனால் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில், அதிமுக தேர்தல் கூட்டணியை இறுதி செய்வது மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை செய்வதற்கான அவசர கூட்டம் நேற்று இரவு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜே.சி.டி.பிரபாகர், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் செம்மலை, மனோஜ்பாண்டியன், ரபி பெர்னார்ட் மற்றும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் இரவு 8 மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வருகிற மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் வேறு எந்தெந்த கட்சிகளை சேர்க்கலாம் என்பது குறித்தும், அவர்களுக்கு எத்தனை இடங்கள் அளிக்கலாம் என்பதும் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது சீட் ஒதுக்கப்பட்டுள்ள பாமக, பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகளை விட்டுக்கொடுப்பது என்றும் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்து, அதிமுக சார்பில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் மக்கள் நல திட்டங்கள் அதிகளவில் இடம்பெற செய்வது என்றும், எந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிடலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்