SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜசுக்கு இறுதி ஒப்புதல்

2019-02-22@ 04:42:45

பெங்களூரு: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜஸ் போர் விமானத்திற்கு இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைக்காக அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இலகு ரக தேஜஸ் போர் விமானம் எச்ஏஎல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த விமானம், போர் விமானங்களிலேயே மிகக்குறைவான எடை கொண்டது. கடந்த 2013ல் முதற்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் தேஜஸ் விமானம் கடந்த 2016ல் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து, 2 ஆண்டுகள் சோதனை செய்யப்பட்டு, விமானப்படையின் கோரிக்கைப்படி பல்வேறு  கட்டமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற ‘ஏரோ இந்தியா’ போர் விமானங்கள் கண்காட்சியில் தேஜஸ் விமானத்திற்கு இறுதிகட்ட ஒப்புதல் சான்றிதழ் முறைப்படி வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், இந்த விமானம் விமானப்படையின் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இந்நிலையில், ஏரோ கண்காட்சியில் நேற்று பங்கேற்ற ராணுவ தளபதி பிபின் ராவத், முதல் முறையாக தேஜஸ் விமானத்தில் ஏறி பயணம் மேற்கொண்டார். இதற்கிடையே, இந்திய ராணுவம், 70 மிமீ நீளமுள்ள 135 ராக்கெட் லாஞ்சர்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பிரான்சின் தலெஸ் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது. இந்த ராக்கெட் லாஞ்சர்களை இலகுரக மற்றும் போர் ஹெலிகாப்டர்களில் பயன்படுத்த முடியும்.

அமைச்சரின் புகாருக்கு எச்ஏஎல் பதில்
சமீபத்தில், பயிற்சியின் போது மிராஜ் போர் விமானம் ரன்வேயில் விபத்துக்குள்ளாகி, 2 விமானிகள் பலியாயினர். இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங், ‘‘எச்ஏஎல் தயாரிக்கும் விமான உதிரிபாகங்கள் ரன்வேயில் கழன்று ஓடுகின்றன’’ என விமர்சித்தார். இது குறித்து எச்ஏஎல் நிறுவன தலைவர் ஆர்.மாதவன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மிராஜ் விமானம் ரன்வேயில் விபத்தாகவில்லை. நீதிமன்ற விசாரணை முடிந்ததும் அதைப் பற்றி பேசுவோம். ரபேல் ஒப்பந்தம் கிடைக்காததால் வர்த்தக ரீதியாகவோ, மன ரீதியாகவோ எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்