SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முத்தலாக் அவசர சட்டம் 3வது முறையாக பிரகடனம்

2019-02-22@ 04:41:46

புதுடெல்லி: முத்தலாக் அவசர சட்டம் நேற்று 3வது முறையாக மீண்டும் பிறப்பிக்கப்பட்டது. முஸ்லிம் சமூகத்தில் ஆண்கள் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவகாரத்து செய்யும் நடைமுறை இருந்தது. இதனால் முஸ்லிம் பெண்களின் திருமண உரிமையை பாதுகாக்கும் முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் இச்சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் முதல் அவசர சட்டம் காலாவதியாகி, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. முத்தலாக் கூறும் ஆண்களுக்கு இச்சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் 3 ஆண்டு சிறை தண்டனையை நீக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன.

இதையடுத்து நீதிபதியை அணுகி ஜாமீன் பெறும் வகையில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. ஆனாலும் இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 3ம் தேதியுடன் முடிவடைவதால் 2வது முறையாக பிறப்பிக்கப்பட்ட முத்தலாக் அவசர சட்டமும் காலாவதியாகிவிடும். இதனால் 3வது முறையாக அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. இதைடுத்து முத்தலாக் அவசர சட்டத்தை நேற்று மீண்டும் பிறப்பித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்