SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நினைவு வளைவு எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

2019-02-22@ 04:14:15

சென்னை: சென்னை காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா  நினைவு வளைவு அமைப்பதற்கு தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி காமராஜர் சாலையில் நினைவு வளைவு கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த நினைவு வளைவு அமைக்க தடை விதிக்க கோரி வக்கீல் தினேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கட்டிடப்பணிகள் நடக்கலாம், திறப்பு விழா நடத்தக்கூடாது என்று முதலில் உத்தரவிட்டது. பின்னர் வளைவில் உள்ள திரையை அகற்றலாம் என்று உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், எந்தவித நிகழ்ச்சியும் இல்லாமல் நினைவு வளைவை தமிழக அரசு திறந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணிய பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகரட்சியின் சாலைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது.
 அதில், எம்ஜிஆர் வளைவு கட்டப்பட்டுள்ள காமராஜர் சாலை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அங்கு கட்டுமானங்கள் மேற்கொள்ள அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.  இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதியளிக்க மட்டுமே மாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளது என்றும் இந்த வளைவு பாதசாரிகளுக்கு இடையூறாக கட்டப்பட்டுள்ளது என்றும் அரசியல் காரணங்களுக்காகவே இதற்கு அனுமதி அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்போது இதுபோன்ற நிரந்தர வளைவுகளால் மக்களுக்கு என்ன பயன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.  இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர். அதில், அரசு தரப்பில் உரிய விதிகளின்படி நினைவு வளைவு கட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்