SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நூலகம், விடுதியை முதல்வர் திறந்து வைத்தார்

2019-02-22@ 04:13:29

சென்னை: சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நூலகக் கட்டிடம் மற்றும் 25 லட்சம் ரூபாயில் ஆய்வு மாணவர் விடுதிக் கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை தொடங்குவதற்கு, ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (பொறுப்பு) விசயராகவனிடம் வழங்கினார்.  மொழிபெயர்ப்பு பணிக்காக தமிழ்நாடு அரசால் 15 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கான நிதி சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை மொழி பெயர்த்த ராசலட்சுமி சீனிவாசன் (இந்தி), சந்திரசேகரன் நாயர் (மலையாளம்), சுவாமி (தெலுங்கு) ஆகியோருக்கு மொழிபெயர்ப்பு பணிக்காக மதிப்பூதியமாக தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும், கூர்ந்தாய்வு செய்த குறிஞ்சி வேலனுக்கு 12 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் முதல்வர் வழங்கினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

  • NorwayUnderRestaurant

    ஐரோப்பாவின் முதல் கடலுக்கடியில் இயங்கும் உணவகம்...நார்வே நாட்டில் துவக்கம்: பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்