SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையில் கூரியர் பார்சலில் அனுப்பிய 725 பவுன் நகை கொள்ளையில் பெண் ஊழியர் உட்பட 6 பேர் கைது: தனிப்படை போலீஸ் மடக்கியது

2019-02-22@ 04:06:46

கோவை: கோவையில், 725 பவுன் தங்க நகை கொள்ளை போன வழக்கில் பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.கோவை தியாகராயநகர் புதுவீதியை சேர்ந்தவர் நாவல் மொரீசா (46). இவர், கோவை மில் ரோட்டில் ‘ஏர் பார்சல்’ என்ற பெயரில் கூரியர் நிறுவனம் நடத்தி  வருகிறார். இவருடைய நிறுவனத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பிரதீவ் சிங்(26) உள்பட 5 பேர் பணி புரிந்து வருகிறார்கள். கோவை பீளமேடு விமான நிலையத்தில் இருந்து தினமும் காலை 7 மணிக்கு சரக்கு விமானம் புறப்பட்டு செல்கிறது. இந்த விமானத்தில் நாவல் மொரீசாவின்  கூரியர் மூலம் கோவை வியாபாரிகள் தங்கத்தை விற்பனைக்கு அனுப்புவது வழக்கம். கோவையில் உள்ள 15 நகை வியாபாரிகள், மும்பையில் புதிதாக திறக்கப்படும் ஷோரூமுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான 5798.64 கிராம் தங்கம் (725 பவுன்) மற்றும்  124.88 காரட் வைர நகைகளை நாவல் மொரீசாவின் கூரியர் நிறுவனத்துக்கு அனுப்பினர். இந்த நகை பார்சலை கடந்த 7ம் தேதி கூரியர் நிறுவன ஊழியர் பிரதீவ்  சிங் ஸ்கூட்டரில் வைத்து கொண்டு கோவை விமான நிலையம் நோக்கி சென்றார்.

அவிநாசி ரோடு சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி அருகே காலை 5.40 மணிக்கு சென்றபோது, அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 3 மர்ம ஆசாமிகள், அவர்  மீது மிளகாய் பொடி தூவி பார்சலை பறித்து கொண்டு சென்றனர். இதுகுறித்து கூரியர் நிறுவன உரிமையாளர் மொரீசா பீளமேடு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில், போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.  இதில், கொள்ளையர்கள் வடவள்ளியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. ஆனால், அப்பகுதியில் அவர்கள் தங்கியிருந்த வீடு பூட்டி கிடந்தது.  இந்நிலையில், நேற்று காலை தொண்டாமுத்தூரில் கொள்ளையர்கள் பதுங்கியிருக்கும் தகவல் தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் விரைந்து  சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது, கார்த்திக், தினகரன், அவருடைய மனைவி பிரவீணா, ஷெல்டன், மோகன்ராஜ், வெங்கடேஷ் ஆகிய 6 பேர்  கைது செய்யப்பட்டனர். இவர்கள், கோவையை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களை தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

 இதுகுறித்து கோவை போலீஸ் கமிஷனர் சுமித் சரண் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, `பிடிபட்டவர்களில் தினகரன் மனைவி பிரவீணா, கூரியர் பார்சல்  சர்வீஸ் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். அவர் கொடுத்த தகவலின் படி, அவருடைய கணவர் தினகரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து  கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பே, கூரியர் நிறுவன ஊழியர்கள் தினமும் காலை எத்தனை மணிக்கு தங்கத்தை எடுத்து  செல்கிறார்கள், அவர்களை எந்த இடத்தில் மடக்கி தங்கத்தை கொள்ளையடிக்கலாம் என்பது குறித்து திட்டம் தீட்டினர். இதையடுத்து, பெண் ஊழியர் உள்பட 6  குற்றவாளிகள் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது’ என்று கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-03-2019

  21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flood

  அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

 • karnatakabuildingcollapse

  கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

 • texas

  டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

 • camelrace

  எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்