SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநில வாலிபால் சங்கம் புதிய போட்டி நடத்த தடை

2019-02-22@ 04:03:29

சென்னை: தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கம் புதிய போட்டிகளை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் விருதுநகர் மாவட்ட வாலிபால் சங்க தலைவர் துரைசிங் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வாலிபால் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைந்தது.  கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி சங்க பொதுக்குழு கூடி,  தேர்தலை நடத்த 10 பேர் கொண்ட இடைக்கால கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி தன்னிச்சையாக செயல்படுகிறது. எனவே, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற  நீதிபதி தலைமையில் சங்கத்தின் தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இடைக்கால கமிட்டி  புதிதாக வாலிபால் போட்டி எதுவும் நடத்தக்கூடாது. அதேபோன்று, எந்தவித கூட்டமும் நடத்தக்கூடாது. அதே நேரத்தில் பிப்ரவரி 16 முதல் 22 வரை நடத்தப்பட்டு  வரும் போட்டிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. வழக்கு விசாரணை 26ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அன்றைய தினம் இடைக்கால கமிட்டி பதில் மனு  தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்