SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

அமைச்சர் கே.சி.வீரமணியின் திருமண மண்டபத்தை நிர்வகிப்பவர் வீட்டில் கைப்பை சிக்கியது?: வருமானவரி சோதனையில் தகவல்

2019-02-21@ 17:50:27

வேலூர் : தமிழகத்தில்  இன்று அமைச்சர் கே.சி.வீரமணி அலுவலகம் உள்பட 31 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வரி எய்ப்பு புகார் காரணமாக இந்த ரெய்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழக வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி. வீரமணியின் சொந்த ஊரான, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் அமைந்துள்ள அவரது வீடு மற்றும் திருமண மண்டபம் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வருமான வாரிசோதனை நடைபெற்று வருகிறது. அதில், அகில இந்திய கட்டுமான சங்கங்களின் தலைவர் ராமமூர்த்தியின், வேலூர் மற்றும் காட்பாடியில் அமைந்த்துள்ள அவரது வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதேபோல, கே.வி குப்பத்தில் உள்ள ராமமூர்த்தியின் சகோதரர் நித்தியானந்தம் மற்றும் அவரது தொழில் நண்பரான ஜெய்பிரகாசன் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளையில் திருமலை வாசன் குழுமம் மற்றும் பவ்யா குழுமத்திற்கு சொந்தமான 31 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இவர்கள் வரி ஏய்ப்பு செய்ததாகவும், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையில் அமைச்சர் கே.சி.வீரமணியின் மண்டபத்தை நிர்வகிப்பவர் வீட்டில் கைப்பை சிக்கியதாக கூறப்படுகிறது. அதில் முக்கிய ஆவணங்கள் உள்ளதாகவும், அது அமைச்சருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்றும் வருமான வரித்துறையினர் சந்தேகம் கொண்டுள்ளதாவும் கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்