SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிதிலமடைந்து சிதைந்து வரும் மாவூற்று வேலப்பர் கோயில்

2019-02-21@ 16:48:17

* புனரமைத்து கும்பாபிஷேகம்
* நடத்த  பக்தர்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர் கோயிலை  புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறையினருக்குபக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பிரசித்தி பெற்றதில் மாவூற்று வேலப்பர் கோயிலாகும். இக்கோயில் மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில்  அமைந்துள்ளது. இதனை முருகப் பெருமானின் எட்டாம் படை வீடு என்றும் அழைப்பர். இக்கோயில் ஜமீன் காலத்தில் புனரமைக்கப்பட்டு அதன் பின்னர் 1973ம் ஆண்டு தமிழக அரசால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதன் பின் 1991ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் முளைப்பாரி, பால்குடம், காவடி, கரகாட்டம்,  சிலம்பாட்டம் , தப்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும், மொட்டை அடித்தல், காது குத்துதல் போன்ற நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
இத்திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் வருகின்றனர்.

சித்திரை மாதத்தின் எல்லா நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெறும். மேலும் ஆடி, தை அமாவாசை, கந்தசஷ்டி, பவுர்ணமி நாட்கள், பங்குனி உத்திரம் போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இது மட்டுமின்றி திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் மாதம் தோறும் நடைபெற்று வருகின்றன. ஆனால் கோயிலில் உள்ள சிலைகள் சேதமுற்று சிதிலமடைந்து வருவதால் வேலப்பர் கோயிலை புனரமைத்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்,`` இந்து ஆகம விதிகளின்படி ஒரு கோயிலுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது விதி. அதனடிப்படையில் இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி, மதுரை மீனாட்சி அம்மன், திருச்சி ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் கும்பாபிஷேகம்
நடத்தப்படுகிறது. மேலும் கிராமங்களில் உள்ள குல தெய்வங்களுக்கும் இந்து முறைப்படி கும்பாபிஷேம் நடத்தப்பட்டு வருகின்றனர். ஆனால், இந்து சமய அறநிலையத் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மாவூற்று வேலப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தி 27 ஆண்டுகள் கடந்தும் ஏன் மவுனம் காத்து வருகின்றனர் என்பது தெரியவில்லை’’ என்று வினா எழுப்பினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்